Realme P4 Power: இந்திய ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு பிரதான நிறுவனம் (Mainstream Brand) 10,001mAh பேட்டரி கொண்ட போனை அறிமுகப்படுத்துகிறது.
Realme P4 Power 5G Launching on 29th January
ஆம், ரியல்மி நிறுவனம் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டது. Realme P4 Power வரும் ஜனவரி 29 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. வெறும் பேட்டரி மட்டுமல்ல, இதன் டிசைன் மற்றும் டிஸ்பிளேவும் மிரட்டலாக இருக்கிறது. முழு விபரம் இதோ.
This isn’t more Power. This is Power rewritten.
— realme (@realmeIndia) January 20, 2026
10001 mAh doesn’t raise the bar. It moves it so far ahead, no one’s catching up.
realme P4Power Launching 29th Jan.
Know More, Stay Tuned! pic.twitter.com/UgRH5xOS7T
Launch Details (வெளியீட்டு விபரங்கள்)
- தேதி: ஜனவரி 29, 2026 (வியாழக்கிழமை).
- நேரம்: மதியம் 12:00 மணி.
- எங்கே வாங்கலாம்?: Flipkart மற்றும் Realme.com இணையதளத்தில் விற்பனைக்கு வரும்.
ஏன் இது "கேம் சேஞ்சர்"? (Top Features)
10,001mAh Titan Battery (The Beast)
- இதுதான் இந்த போனின் ஹைலைட். ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 முதல் 5 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 32 மணி நேரம் தொடர்ந்து வீடியோ பார்க்கலாம்!
- Power Bank Killer: 27W Reverse Charging இருப்பதால், இந்த போனை வைத்து உங்கள் நண்பரின் போனுக்கு சார்ஜ் ஏற்றலாம்!
- Charging: இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 80W Fast Charging வசதி உள்ளது.
TransView Design (Transparent Look)
போனின் பின்பக்கம் பாதி டிரான்ஸ்பரன்ட் (Semi-transparent) ஆக இருக்கும். உள்ளே இருக்கும் காப்பர் காயில்கள் தெரிவது போல ஒரு ஃபியூச்சரிஸ்டிக் டிசைன்.
- Colors: TransOrange (ஆரஞ்சு), TransBlue (நீலம்) மற்றும் TransSilver நிறங்களில் வரும்.
இதே ஜனவரி இறுதியில் வரும் மற்றொரு மாஸ் போன்! 50MP ZEISS கேமராவுடன் வரும் Vivo X200T பற்றி தெரியுமா?
டிஸ்பிளே & ப்ராசஸர்
- Display: 6.78-inch 144Hz 4D Curved OLED திரை. கேமிங் மற்றும் வீடியோ பார்க்க அமர்க்களமாக இருக்கும்.
- Processor: இதில் லேட்டஸ்ட் MediaTek Dimensity 7400 Ultra சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 5G வேகத்தில் எந்த குறையும் வைக்காது.
கேமரா
பெரிய பேட்டரி என்பதால் கேமராவை குறைத்துவிடவில்லை.
- Main: 50MP Sony Camera (OIS வசதியுடன்).
- Ultra Wide: 8MP லென்ஸ்.
விலை என்னவாக இருக்கும்? (Price Leak)
இவ்வளவு வசதிகள் இருந்தாலும், ரியல்மி இதை "P Series" (Performance Series) கீழ் கொண்டு வருவதால் விலை குறைவாகவே இருக்கும்.
- இது ₹20,000 முதல் ₹23,000 விலைக்குள் வர அதிக வாய்ப்புள்ளது.
- அறிமுக சலுகையாக கார்டு ஆஃபர் (Bank Offer) போட்டால் ₹19,999-க்குக் கூட கிடைக்கலாம்.!
வாங்கலாமா?
- டிராவல் செய்பவர்கள், ஸ்விக்கி/சோமேட்டோ டெலிவரி பார்ட்னர்கள், மற்றும் கேமர்ஸ் (Gamers) ஆகியோருக்கு இதைவிடச் சிறந்த போன் 2026-ல் வேறெதுவும் இல்லை. பவர் பேங்க் தூக்கும் பாரம் இனி இல்லை.!
.jpg)