புதிதாக போன் வாங்கிய சில மாதங்களிலேயே பலருக்கும் வரும் மிகப்பெரிய பிரச்சினை - "சார்ஜ் நிக்கவே மாட்டேங்குது!". காலையில் 100% சார்ஜ் போட்டால், மதியமே 20% ஆகிவிடுகிறதா? பவர் பேங்க் இல்லாமல் வெளியே போக முடியவில்லையா?
காலையில் சார்ஜ் போட்டா மதியமே காலி ஆகுதா?
கவலை வேண்டாம்! உங்கள் போன் பேட்டரி பழுதாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. உங்களுக்குத் தெரியாமல் போனுக்குள் ஒளிந்திருக்கும் சில "எதிரி செட்டிங்ஸ்" தான் இதற்குக் காரணம். அவற்றை எப்படி மாற்றுவது? உங்கள் போன் பேட்டரி லைஃப்பை இரண்டு மடங்கு அதிகரிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
முதல் எதிரி: 120Hz டிஸ்ப்ளே (Screen Refresh Rate)
இன்று வரும் பல போன்களில் 120Hz அல்லது 144Hz டிஸ்ப்ளே இருக்கிறது. இது பார்ப்பதற்கு 'ஸ்மூத்' ஆக இருக்கும். ஆனால், இதுதான் உங்கள் பேட்டரியின் முதல் எதிரி!
- என்ன செய்ய வேண்டும்?: Settings > Display > Screen Refresh Rate பகுதிக்குச் செல்லுங்கள்.
- தீர்வு: அங்கே "Standard (60Hz)" அல்லது "Auto" என்று மாற்றுங்கள். 120Hz எப்போதும் ஆன்-ல் இருந்தால் பேட்டரி ஜூஸ் போல காலியாகும்.
5G நெட்வொர்க் (Smart 5G Mode)
உங்கள் பகுதியில் 5G சிக்னல் குறைவாக இருந்தாலோ, அல்லது 5G தேவையில்லாத நேரத்திலோ அது ஆன்-ல் இருப்பது ஆபத்து. 5G மோடம் 4G-யை விட அதிக சக்தியை உறிஞ்சும்.
- மாற்ற வேண்டியது: Settings > Mobile Network > SIM. இதில் "Preferred Network Type" என்பதில் 4G/LTE என்பதைத் தேர்வு செய்யுங்கள். படம் டவுன்லோட் செய்யும்போது மட்டும் 5G மாற்றிக்கொள்ளலாம்.
ஒளிந்திருக்கும் உளவாளி (Wi-Fi & Bluetooth Scanning)
நீங்கள் வைஃபை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் ஆஃப் செய்திருந்தாலும், போனுக்குள் அது ஆன்-லேயே இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? லொகேஷன் துல்லியமாக இருக்க இவை எப்போதும் ஸ்கேன் செய்துகொண்டே இருக்கும்.
- எப்படி தடுப்பது?: Settings > Location > Location Services.
- Off செய்யவும்: இங்கே "Wi-Fi Scanning" மற்றும் "Bluetooth Scanning" என்று இரண்டு இருக்கும். அதை உடனே OFF செய்யுங்கள். இது பேட்டரியை மட்டுமல்ல, பிரைவசியையும் காக்கும்.
தேவையில்லாத ஃபீட்பேக் (Haptic Feedback)
டைப் செய்யும்போதும், பேக் (Back) பட்டன் அழுத்தும்போதும் 'விர்.. விர்..' என்று அதிர்வது (Vibration) ஒரு சிறிய மோட்டாரால் இயங்குகிறது. ஒவ்வொரு முறை அதிரும்போதும் பேட்டரி குறையும்.
- செட்டிங்ஸ்: Settings > Sound & Vibration. இதில் "Touch Vibration" அல்லது "Haptic Feedback" என்பதை ஆஃப் செய்துவிடுங்கள்.
பேக்ரவுண்ட் அப்ளிகேஷன் (Background Apps)
நீங்கள் தூங்கினாலும், உங்கள் போனில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தூங்காது. பின்னணியில் இயங்கி சார்ஜைக் குறைக்கும்.
- தீர்வு: Settings > Battery > Background Usage Limits. இதில் அடிக்கடி பயன்படுத்தாத ஆப்களை "Deep Sleep" மோடில் போடுங்கள்.

