தண்ணீரில் போட்டாலும் ஒன்னும் ஆகாது! IP69 ரேட்டிங் உடன் வந்த மிரட்டல் போன்! ஒப்போ ரசிகர்களுக்கு ட்ரீட்!

Oppo Reno 15 FS 5G ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம்! 50MP OIS கேமரா, 80W சார்ஜிங் மற்றும் IP69 ரேட்டிங். இதன் விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள் இதோ.
Sabari

Oppo Reno 15 FS 5G Launch Tamil: 6500mAh பேட்டரி, 50MP கேமரா! விலை விபரம்., PPO Reno 15 FS 5G Launch & Specs, Oppo Reno 15 FS 5G smartphone back panel design,தண்ணீரில் போட்டாலும் ஒன்னும் ஆகாது! IP69 ரேட்டிங் உடன் வந்த மிரட்டல் போன்! ஒப்போ ரசிகர்களுக்கு ட்ரீட்!

OPPO Reno 15 FS 5G Launch & Specs:
IP69 ரேட்டிங் உடன் வந்த மிரட்டல் போன்!  ஒப்போவின் ரெனோ சீரிஸ் வரிசையில் 7-வது மாடலாக புதிய ஸ்மார்ட்போன் இணையத்தில் களமிறங்கியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களைப் பார்ப்போம்.

IP69 ரேட்டிங் உடன் வந்த மிரட்டல் போன்! 

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ (OPPO) தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது. குறிப்பாக அதன் Reno Series போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏற்கனவே Reno 15 சீரிஸில் ஆறு மாடல்கள் (Reno 15, Pro, Pro Max, Mini, 15C, 15F) உள்ள நிலையில், இப்போது ஏழாவது மாடலாக OPPO Reno 15 FS 5G ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு? (Price Details)

தற்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் போலந்து மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியுள்ளது.

  • போலந்து விலை: இந்திய மதிப்பில் சுமார் ₹40,600.
  • இத்தாலி விலை: இந்திய மதிப்பில் சுமார் ₹50,200.

இந்த போன் Aurora Blue மற்றும் Twilight Blue ஆகிய இரண்டு ப்ரீமியம் கலர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இது எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

OPPO Reno 15 FS 5G: மிரட்டலான சிறப்பம்சங்கள்

இந்த போனின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டே இதன் டிஸ்பிளே மற்றும் பேட்டரி தான்.

டிஸ்பிளே & டிசைன்:

6.57-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளேவுடன் இது வருகிறது. இதில் வீடியோ பார்ப்பது மற்றும் கேம் விளையாடுவது சிறந்த அனுபவத்தைத் தரும்.

புது 5G போன் வாங்குறீங்க.. சிம் கார்டு எது பெஸ்ட்? 👉 ஜியோ, ஏர்டெல் விலை அதிகம்! டாடா உடன் இணைந்த BSNL 4G வேகம் எப்படி இருக்கு? டெஸ்ட் ரிப்போர்ட்!

Oppo Reno 15 FS 5G Launch Tamil: 6500mAh பேட்டரி, 50MP கேமரா! விலை விபரம்., PPO Reno 15 FS 5G Launch & Specs, Oppo Reno 15 FS 5G smartphone back panel design
கேமரா (Camera Highlights):

ஒப்போ என்றாலே கேமரா தான். இதில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன:

  • Main Camera: 50MP SmartSense SC532HS சென்சார் (OIS வசதியுடன்). இது ஆடுகிற வீடியோக்களையும் நிலையாக எடுக்கும்.
  • Ultra-wide: 8MP லென்ஸ்.
  • Macro: 2MP சென்சார்.
  • Selfie: முன்பக்கமும் 50MP Samsung JN5 கேமரா இருப்பதால் செல்ஃபி பிரியர்களுக்கு இது செம்ம ட்ரீட்!

பேட்டரி & சார்ஜிங்:

வழக்கமாக 5000mAh பேட்டரி தான் வரும். ஆனால் இதில் 6500mAh மெகா பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 80W Fast Charging சப்போர்ட் உள்ளது.

பெர்ஃபார்மன்ஸ்:

இது Snapdragon 6 Gen 1 5G சிப்செட் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 16 (ColorOS 16) இயங்குதளத்துடன் வருகிறது.

டியூரபிலிட்டி (Durability):

தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க IP66, IP68 மற்றும் IP69 என மூன்று விதமான பாதுகாப்புகளை இது கொண்டுள்ளது. சுடுதண்ணீரில் விழுந்தால் கூட போனுக்கு எதுவும் ஆகாது!

ஒப்போவின் மற்ற மாடல்கள் & விலை ஒப்பீடு (India Price List)

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள Reno 15 சீரிஸ் போன்களின் விலையோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம்:

மாடல் (Model)வேரியண்ட் (RAM/Storage)விலை (Price)
Oppo Reno 15 5G8GB + 256GB₹45,999
12GB + 512GB₹53,999
Oppo Reno 15 Pro 5GBase Variant₹67,999
Oppo Reno 15 Pro MiniBase Variant₹59,999
Oppo Reno 15C 5G8GB + 256GB₹34,999

குறிப்பு: பிப்ரவரி மாதத்தில் Reno 15C மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நேரத்தில் வந்த இன்னொரு ஸ்லிம்மான போன் பற்றி தெரியுமா? 👉 உலகிலேயே மெலிதான போன்! Motorola Signature-ன் மிரட்டல் டிசைன் மற்றும் விலை விபரம்!

இது வொர்த் தானா?

👍 Tech Voice Tamil கருத்து:

Oppo Reno 15 FS 5G மாடலில் 6500mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங் இருப்பது மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், 40,000 ரூபாய் விலைக்கு Snapdragon 6 Gen 1 சிப்செட் என்பது சற்று குறைவு தான். கேமரா மற்றும் டிசைன் விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வு. ஆனால் கேமிங் (Gaming) பிரியர்கள் யோசித்து வாங்குவது நல்லது.

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஒப்போ 5G போன்களை ஆஃபர் விலையில் பார்க்க:

👉 Check Oppo Mobile Offers

கருத்துரையிடுக