Upcoming Smartphones in India This Week (Jan 26 - Feb 1): ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் டெக் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கப்போகிறது. பட்ஜெட் விலையில் இருந்து ஃபிளாக்ஷிப் லெவல் வரை மூன்று முக்கியமான போன்கள் வெளியாகின்றன.
Realme P4 Power (The Battery Monster)
இந்த வாரத்தின் மிகப்பெரிய ஹைலைட் இதுதான்! 10,001mAh பேட்டரியுடன் ஒரு போன் வருவது இதுவே முதல் முறை.
- Launch Date: ஜனவரி 29.
- Battery: 10,001mAh Titan Battery (தொடர்ந்து 32.5 மணிநேரம் வீடியோ பார்க்கலாம்!).
- Weight: இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், இதன் எடை வெறும் 219 கிராம் தானாம்!.
- Charging: 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் (வேற போனுக்கு சார்ஜ் போடலாம்).
- Display: 1.5K 144Hz கர்வ்டு டிஸ்பிளே.
- Processor: MediaTek Dimensity 7400 Ultra.
- Expected Price: ரூ.30,000-க்குள் இருக்கலாம்.
Redmi Note 15 Pro Series (The All-Rounder)
ரெட்மியின் நோட் சீரிஸ் எப்போதுமே ஹிட் தான். இந்த முறை Pro மற்றும் Pro+ என இரண்டு மாடல்கள் வருகின்றன.
- Launch Date: ஜனவரி 29.
- Camera: Redmi Note 15 Pro+ மாடலில் 200MP MasterPixel கேமரா உள்ளது.
- Battery: Pro+ மாடலில் 6,500mAh பேட்டரி மற்றும் 100W சார்ஜிங். (Pro மாடலில் 6,580mAh இருக்கலாம்).
- Durability: தண்ணீர் மற்றும் தூசியைத் தாங்க IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
- Expected Price: ரூ.30,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo X200T (The Camera Beast)
கேமரா பிரியர்களுக்காக விவோ கொண்டு வரும் புதிய மாடல் இது.
- Launch Date: ஜனவரி 27.
- Camera: மூன்று கேமராக்களுமே 50MP ZEISS லென்ஸ்கள் (Main + Ultrawide + Periscope Zoom).
- Processor: பவர்ஃபுல் Dimensity 9400+ சிப்செட்.
- Display: 6.67 இன்ச் 1.5K AMOLED திரை.
- Expected Price: ரூ.60,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி வாட்ஸ்அப்பில் உங்கள் நம்பரை யாராலும் பார்க்க முடியாது!
★ Tech Voice Verdict
இந்த வாரம் "Realme P4 Power" தான் அதிக கவனத்தை ஈர்க்கிறது. நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் (Traveller) என்றால், பவர் பேங்க் சுமப்பதற்குப் பதில் இந்த போனையே வாங்கலாம்.
ஆனால், ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர் அனுபவம் வேண்டுமென்றால் Redmi Note 15 Pro+ சிறந்த தேர்வாக இருக்கும். கேமரா தான் முக்கியம் என்றால் மட்டும் Vivo X200T பக்கம் செல்லுங்கள்.
Source / நன்றி: 91mobiles

