Oppo Find X9s: 200MP கேமராவுடன் வரும் "பாக்கெட் ராக்கெட்"

Oppo Find X9s இந்தியா வருகிறது! 6.3 இன்ச் Compact Design, 7000mAh மெகா பேட்டரி மற்றும் இரண்டு 200MP கேமராக்கள். Q2 2026 வெளியீடு. முழு விபரம்.
Sabari

Oppo Find X9s: 200MP கேமராவுடன் வரும் "பாக்கெட் ராக்கெட்", Oppo Find X9s compact smartphone with dual 200MP camera and 7000mAh battery

Oppo Find X9s:
2026-ன் "சிறிய" அசுரன்! 7000mAh பேட்டரி + 200MP கேமரா!: பெரிய டிஸ்பிளே போன்கள் தான் ட்ரெண்ட் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒப்போ (Oppo) நிறுவனம் ஒரு சிறிய ஆனால் பயங்கரமான போனை களமிறக்கத் தயாராகிவிட்டது. அதுதான் Oppo Find X9s.

Oppo Find X9s Release date

இதுவரை வந்த லீக்ஸ் (Leaks) தகவல்களின்படி, இந்த போன் வரும் Q2 2026 (ஏப்ரல் - ஜூன்) வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அளவில்தான் இது "சிறிய" போன் (Compact Phone). ஆனால் உள்ளே இருக்கும் விஷயங்கள் எல்லாம் "பெரிய" ரகம். அப்படி என்ன ஸ்பெஷல்? விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே: கையடக்கமான அளவு (Compact Size)

  • இன்றைய ஃபிளாக்ஷிப் போன்கள் எல்லாம் 6.7 இன்ச் அல்லது 6.8 இன்ச் என்று பெரிதாக வரும். ஆனால் இந்த Find X9s, வெறும் 6.3-இன்ச் தட்டையான OLED டிஸ்பிளே (Flat Screen) உடன் வருகிறது.
  • இது கையில் பிடிக்க மிகவும் வசதியாக இருக்கும். iPhone 16 Pro அல்லது Samsung S26 போன்ற காம்பாக்ட் போன்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு சாய்ஸ்.
  • 1.5K Resolution மற்றும் 120Hz Refresh Rate இருப்பதால் டிஸ்பிளே செம ஷார்ப்பாக இருக்கும்.
சிறிய போன் பிடிக்குமா? அப்போ பிப்ரவரி 18 வெளியாகும் கூகுள் பிக்சல் 10a பற்றித் தெரியுமா? 👉 கேமரா பம்ப் இல்லாத முதல் பிக்சல் போன்! Pixel 10a டிசைன் ஷாக்!

Oppo Find X9s compact smartphone with dual 200MP camera and 7000mAh battery

கேமரா: 200MP மேஜிக்! (Dual 200MP Monsters)

  • ஒப்போவின் இந்த போனில் இரண்டு 200MP கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  1. Main Camera: 200MP முதன்மை கேமரா.
  2. Telephoto: 200MP பெரிஸ்கோப் ஜூம் கேமரா.
  • இது தவிர, 50MP அல்ட்ரா வைடு கேமராவும் உண்டு. சிறிய போனில் இவ்வளவு பெரிய கேமரா சென்சார்கள் இருப்பது ஆச்சரியம்.

பேட்டரி: இதுதான் ஹைலைட்! (Massive Battery)

  • பொதுவாக சிறிய போன்களில் பேட்டரி குறைவாகத் தான் (4000-5000mAh) இருக்கும். ஆனால் ஒப்போ இதில் ஒரு மேஜிக் செய்துள்ளது.
  • இந்த குட்டி போனுக்குள் 7000mAh பேட்டரியை திணித்துள்ளனர்!
  • இது MediaTek Dimensity 9500 சீரிஸ் சிப்செட் உடன் வருவதால், பேட்டரி லைஃப் சும்மா 2 நாள் வரை தாராளமாக வரும்.
  • சார்ஜ் செய்ய 80W Fast Charging மற்றும் 50W Wireless Charging வசதியும் உள்ளது.

லான்ச் எப்போ? (India Launch Timeline)

  • 91Mobiles மற்றும் டிப்ஸ்டர்களின் தகவல் படி, இந்த போன் 2026-ன் இரண்டாம் காலாண்டில் (Q2 2026) அதாவது ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

இதையும் படியுங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க! இந்த வாரம் வெளியான 5 மிரட்டல் ஸ்மார்ட்போன்கள்!

Tech Voice Verdict

Oppo Find X9s ஒரு "பாக்கெட் ராக்கெட்" 🚀. சிறிய டிசைன் வேண்டும், ஆனால் பேட்டரி பெரிதாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதுதான் கனவு போன்.

6.3 இன்ச் போனில் 7000mAh பேட்டரி என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. இது உண்மையாகவே வந்தால், Samsung S26 மற்றும் Pixel 10a மாடல்களுக்கு இது சிம்ம சொப்பனமாக இருக்கும்! 🔥✅

Source / நன்றி: இந்தத் தகவல்கள் 91Mobiles மற்றும் Gadgets360 இணையதளங்களில் வெளியான லீக்ஸ் அடிப்படையில் எழுதப்பட்டது.

கருத்துரையிடுக