தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (National Food Security Act) நாடு முழுவதும் 20.4 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 80.6 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்று வருகின்றனர். இதில் போலிப் பதிவுகளை நீக்கி, உண்மையான ஏழை எளிய மக்களுக்குப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களையும், கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
Inactive Ration Cards Temporary Block
செயல்படாத ரேஷன் கார்டுகள் தற்காலிக முடக்கம்: ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் இறந்த பிறகும் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்த பின்னும் பழைய முகவரியில் பதிவு தொடர்வது மற்றும் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளில் இருப்பது போன்ற முறைகேடுகளைக் களைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களாக எந்தப் பொருளும் வாங்காத சுமார் 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் முதற்கட்டமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளன. இருப்பினும் இவர்களது பெயர்கள் உடனடியாகப் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படாது. இதையும் படியுங்கள்: Free Lifetime Train Travel: நவம்பர் 1 முதல் ரயிலில் இலவச பயணம்!
Three Months Grace Period and eKYC Verification
3 மாத கால அவகாசம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை: தற்காலிகமாக முடக்கப்பட்ட கார்டுதாரர்கள் தங்களது தகுதியை நிரூபிப்பதற்காக 3 மாத கால அவகாசம் (Three months grace period) வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவிற்குள் பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டைக்குரிய கைரேகை அல்லது கண்விழி சரிபார்ப்புப் பணிகளை (eKYC verification) முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு தகுதியைச் சரிபார்ப்பார்கள். தகுதி உறுதி செய்யப்பட்டவுடன் முடக்கப்பட்ட அட்டை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
இதையும் படியுங்கள்: சோனி கேமரா... AMOLED டிஸ்ப்ளே... 5400mAh பேட்டரி... 50W சார்ஜிங்... எந்தெந்த மாடல்கள்?
Digital Records and Ration Card Cancellation Data
டிஜிட்டல் பதிவுகள் மற்றும் கார்டுகள் நீக்கம்: தரவுகளைச் சீரமைக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 5.8 கோடி போலி ரேஷன் அட்டைகள் அதிரடியாக நீக்கப்பட்டன. மேலும் நாடு தழுவிய அளவில் இதுவரை 90.64 சதவீத கார்டுகளுக்குச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பயனாளிகள் குறிப்பிட்ட 3 மாத கால அவகாசத்திற்குள் நியாயவிலைக் கடைக்குச் சென்று தங்களுடைய விவரங்களை உறுதி செய்து கொண்டால், ரேஷன் கார்டு ரத்தாகாமல் எளிதாகத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும்.

