Realme ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! ₹4,000 வரை விலை உயர்ந்த 3 முக்கிய போன்கள்!
ரியல்மி (Realme) போன் வாங்கத் திட்டமிட்டிருந்தீர்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ரியல்மி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான மூன்று 5G ஸ்மார்ட்போன்களின் விலையை அமைதியாக உயர்த்தியுள்ளது.
₹3000 முதல் ₹4000 வரை அதிகம்! Realme புது ரேட் லிஸ்ட்!
எந்த அறிவிப்பும் இல்லாமல், ஒரே இரவில் சுமார் "₹3000 முதல் ₹4000 வரை அதிகம்!" உயர்த்தப்பட்டுள்ளது. சிப்செட் மற்றும் மெமரி (Memory) பாகங்களின் விலை உயர்வால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த போன்களின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.
realme smartphones just got pricier in India
— Abhishek Yadav (@yabhishekhd) February 10, 2026
realme has officially increased prices by ₹3,000–₹4,000 due to rising memory, chipset & ecosystem costs.
📅 Effective from Feb 11, 2026
🔺 Price hike details:
• realme 15 5G → +₹3,000
• realme 16 Pro 5G → +₹3,000
• realme… pic.twitter.com/4R9RcyQRkd
ஏன் இந்த விலை உயர்வு? (Why Price Hike?)
ஸ்மார்ட்போன் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின் (Components) விலை உலகளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக Memory, Chipset மற்றும் System Costs அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி விலையை உயர்த்துவதாக ரியல்மி விளக்கம் அளித்துள்ளது.
இந்த புதிய விலைகள் பிப்ரவரி 11, 2026 முதல் அமலுக்கு வந்துவிட்டன. "₹3000 முதல் ₹4000 வரை அதிகம்!"
புதிய விலை பட்டியல் (New Price List)
கீழே உள்ள பட்டியலில் பழைய விலைக்கும், புதிய விலைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.
| Variant (RAM+Storage) | பழைய விலை (Old) | புதிய விலை (New) | உயர்வு (Hike) |
|---|---|---|---|
| Realme 15 5G | |||
| 8GB + 128GB | ₹25,999 | ₹28,999 | + ₹3,000 |
| 8GB + 256GB | ₹27,999 | ₹30,999 | + ₹3,000 |
| 12GB + 256GB | ₹29,999 | ₹32,999 | + ₹3,000 |
| Realme 16 Pro 5G | |||
| 8GB + 128GB | ₹31,999 | ₹34,999 | + ₹3,000 |
| 8GB + 256GB | ₹33,999 | ₹36,999 | + ₹3,000 |
| 12GB + 256GB | ₹36,999 | ₹39,999 | + ₹3,000 |
| Realme 16 Pro+ 5G | |||
| 8GB + 128GB | ₹39,999 | ₹43,999 | + ₹4,000 |
| 8GB + 256GB | ₹41,999 | ₹45,999 | + ₹4,000 |
| 12GB + 256GB | ₹44,999 | ₹48,999 | + ₹4,000 |
★ Tech Voice Verdict
இது உண்மையாகவே ஒரு ₹3000 முதல் ₹4000 வரை அதிகம்!" Price Shock" தான்! 😱
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், இப்போது வாங்க நினைப்பவர்கள் Realme 16 Pro+ மாடலுக்கு ₹48,000 கொடுப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.
இந்த விலையில் இப்போது சந்தையில் Nothing Phone 4a அல்லது Xiaomi போன்ற மாற்று ஆப்ஷன்கள் உள்ளன. எனவே, அவசரப்பட்டு வாங்க வேண்டாம்! 🛑
Source / நன்றி: Live Hindustan
