Tecno Spark 50 5G அறிமுகம்: முழு விலை & அம்சங்கள்!

Tecno Spark 50 5G போனின் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங், ரூ.16,999 விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விபரம் தமிழில்

மார்க்கெட்டையே அதிரவைக்கும் Tecno Spark 50 5G! 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்குடன் அசத்தல் அறிமுகம்!, Tecno Spark 50 5G launch in India price and specifications with 6500mAh battery

மார்க்கெட்டையே அதிரவைக்கும் Tecno Spark 50 5G! 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்குடன் அசத்தல் அறிமுகம்!: பட்ஜெட் விலையில் பக்கா 5G போனை தேடுபவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது! வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு அட்டகாசமான அம்சங்களுடன், புதிய Tecno Spark 50 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்டமான 6500mAh பேட்டரி மற்றும் பிக்சல் போன்களைப் போன்ற பிரீமியம் கேமரா டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. வாடிக்கையாளர்களின் நிஜ உலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு நீடித்து உழைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடலின் முழு விபரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Tecno Spark 50 5G Specifications

டிசைனைப் பொறுத்தவரை, இந்த போனின் பேக் பேனலில் விண்வெளித் தர அலுமினியத்தால் செய்யப்பட்ட பிரீமியம் கேமரா மாட்யூல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக 1.5 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ராணுவ தரச் சான்றிதழைப் (Military-grade certification) பெற்றுள்ளது. எதிர்பாராதவிதமாக தண்ணீர் தெறித்தாலும் போனைப் பாதுகாக்க ஐபி64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (IP64 Water and dust resistance) வசதியும் இதில் உள்ளது.

திரை அனுபவத்தை மென்மையாக்க, இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) கொண்ட 6.78 இன்ச் அளவிலான எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (HD+ IPS display) வழங்கப்பட்டுள்ளது. இதன் திரையின் ரெசல்யூஷன் 720 x 1576 பிக்சல்கள் ஆகும். போனின் ஒட்டுமொத்த செயல்திறனுக்காக மிகவும் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) பொருத்தப்பட்டுள்ளது. இது தினசரி பயன்பாட்டிற்கும், மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங்கிற்கும் மிகச் சிறப்பாக உதவும்.

🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 ரூ.12,999-க்கு இப்படி ஒரு போனா? 10 வருட அப்டேட், 120Hz டிஸ்பிளேவுடன் மாஸ் காட்டும் Redmi 15A 5G!

Tecno Spark 50 5G launch in India price and specifications with 6500mAh battery

Tecno Spark 50 5G Camera and AI Features

புகைப்படங்களை நேர்த்தியாக எடுப்பதற்காக இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா (50MP primary camera) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தெளிவான செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் முன்புற கேமரா (8MP selfie camera) உள்ளது. லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்ப இதில் AI ரைட்டிங் அசிஸ்டன்ட், AI எரேசர் 2.0 மற்றும் வாட்ஸ்அப் அசிஸ்டன்ட் போன்ற பல புதிய ஏஐ அம்சங்களை (AI features) டெக்னோ வெச்சி செஞ்சிட்டாங்க!

Tecno Spark 50 5G Battery Details

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய ஹைலைட்டே இதன் பேட்டரி தான்! அடிக்கடி சார்ஜ் செய்யத் தேவையில்லாமல், பல நாட்களுக்குத் தொடர்ந்து உழைக்கக்கூடிய பிரம்மாண்டமான 6500எம்ஏஎச் பேட்டரி (6500mAh battery) இதில் இடம்பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரியை மிக வேகமாக சார்ஜ் செய்வதற்கு 45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) சப்போர்ட் பாக்ஸிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 ஸ்மார்ட்போன் கேமராவில் சுனாமி! 200MP சென்சார்களுடன் மோதும் OPPO Find X9 Ultra மற்றும் VIVO X300 Ultra!

Tecno Spark 50 5G Price in India

இந்த மொபைல் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவுபடுத்திக் கொள்ளும் வசதியுடன் (Expandable storage), 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில் 4ஜிபி ரேம் கொண்ட அடிப்படை மாடலின் விலை இந்தியாவில் ரூ.16,999 (Price in India) ஆகவும், டாப் மாடலான 6ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.18,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டகாசமான போனின் விற்பனை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் (Sale from April 3) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் தொடங்குகிறது. இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ (No cost EMI) சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக