மொபைலில் Email ID ஓபன் செய்வது எப்படி? Step-by-Step Guide

யாருடைய உதவியும் இல்லாமல் உங்கள் மொபைலில் எளிதாக புதிய Email IDஅக்கவுண்ட் / மெயில் ஐடி உருவாக்குவது எப்படி? ஆரம்பம் முதல் இறுதி வரை Step-by-Step Guide

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil' மொபைலில் Email ID ஓபன் செய்வது எப்படி? Step-by-Step Guide

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கினால், அதில் முதலில் நமக்குத் தேவைப்படுவது ஒரு மெயில் ஐடி (Email ID) தான். ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப் டவுன்லோட் செய்ய, பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய என அனைத்திற்கும் இது கட்டாயமாகிவிட்டது. இதற்காக நீங்கள் கம்ப்யூட்டர் சென்டருக்குச் செல்ல வேண்டாம். உங்களின் மொபைலிலேயே (Poco, Redmi, Samsung என எந்த மொபைலாக இருந்தாலும்) மிக எளிதாக புதிய ஜிமெயில் அக்கவுண்ட் எப்படி உருவாக்குவது என்பதை ஸ்கிரீன்ஷாட் படங்களுடன் ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகப் பார்ப்போம்.

மொபைலில் Email ID ஓபன் செய்வது எப்படி? Step-by-Step Guide

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil

Open Settings and Accounts Sync

செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் செல்வது எப்படி: (Open Settings and Accounts) ஸ்டெப் 1: உங்களின் ஸ்மார்ட்போனில் புதிய மெயில் ஐடியை உருவாக்க, முதலில் மொபைலின் 'Settings' (செட்டிங்ஸ்) Redmi & POCO  மொபைல்களில் "Additional Settings" சென்று அக்கவுண்ட் டிசைனிங் ஆப்பை ஓபன் செய்யுங்கள்.

🌐 மேலும் அதிகாரப்பூர்வ விபரங்களுக்கு: 👉 Google Account உருவாக்க இங்கே செல்லவும்

ஸ்டெப் 2: செட்டிங்ஸ் உள்ளே சென்றதும், திரையைக் கீழ்ப்புறமாக ஸ்க்ரோல் செய்து வாருங்கள். அங்கு 'Accounts & sync' (அல்லது சில போன்களில் 'Passwords & accounts') என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதைக் கிளிக் செய்யுங்கள்.

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil

Add New Google Account

புதிய கூகுள் கணக்கைச் சேர்த்தல்: (Add New Google Account) 

ஸ்டெப் 3: அந்தப் பக்கம் திறந்ததும், கீழே ஸ்க்ரோல் செய்தால் கடைசியாக பிளஸ் (+) குறியுடன் 'Add account' (Add account option) என்று இருக்கும். அதைக் கண்டுபிடித்து அழுத்தவும்.

ஸ்டெப் 4: இப்போது உங்கள் திரையில் பல ஆப்களின் பெயர்கள் தோன்றும். அதில் முதலாவதாக இருக்கும் 'Google' என்பதைக் கிளிக் செய்யுங்கள். இப்போது செக்கிங் இன்ஃபோ (Checking info) என்று வந்து, உங்கள் போனின் ஸ்கிரீன் லாக் பாஸ்வேர்டு அல்லது கைரேகை கேட்கும். அதைக் கொடுக்கவும்.

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil
Tap Create Account Option

கணக்கை உருவாக்கு ஆப்ஷனை தேர்வு செய்தல்: (Tap Create Account Option) ஸ்டெப் 5: இப்போது கூகுள் 'Sign in' திரை வரும். அதில் இமெயில் ஐடி கேட்கும் கட்டத்திற்கு கீழே, இடதுபுறம் ஓரத்தில் உள்ள 'Create account' (Create new account) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 6: அதில் தோன்றும் இரண்டு ஆப்ஷன்களில், முதல் ஆப்ஷனான 'For my personal use' (எனது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க: 👉 Infinix NOTE 60 Ultra: 200MP கேமரா, 7000mAh பேட்டரி போன்!

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil
Enter Name and Date of Birth

பெயர் மற்றும் பிறந்த தேதி விபரங்கள்: (Enter Name and Date of Birth) 

ஸ்டெப் 7: அடுத்த பக்கத்தில் 'First name' கட்டத்தில் உங்கள் பெயரையும், 'Surname' கட்டத்தில் உங்கள் இன்ஷியலையும் ஆங்கிலத்தில் டைப் செய்து கீழே உள்ள 'Next' பட்டனைக் கொடுக்கவும்.

ஸ்டெப் 8: அடுத்து வரும் திரையில் (Basic information), உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை உள்ளிடுங்கள். அதற்கு கீழே உள்ள உங்கள் பாலினம் (Gender) கட்டத்தில் நீங்கள் ஆணா (Male) அல்லது பெண்ணா (Female) என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டு 'Next' பட்டனை அழுத்தவும்.

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil
Choose Your Custom Email Address

புதிய மெயில் முகவரியை உருவாக்குதல்: (Choose Your Custom Email Address) 

ஸ்டெப் 9: நீங்கள் கொடுத்த பெயரை வைத்து, கூகுளே உங்களுக்கு இரண்டு மெயில் ஐடிகளைப் பரிந்துரைக்கும். அது உங்களுக்கு வேண்டாம் என்றால், மூன்றாவதாக உள்ள 'Create your own Gmail address' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 10: இப்போது தோன்றும் காலி கட்டத்தில், உங்களுக்குப் பிடித்த பெயரில், எந்த இடைவெளியும் (Space) இல்லாமல் ஒரு மெயில் ஐடியை டைப் செய்யுங்கள். அந்த பெயர் ஏற்கனவே வேறு யாராவது பயன்படுத்தி இருந்தால், உங்கள் பெயருடன் சில எண்களைச் சேர்த்து (உதாரணம்: sakthi2026) 'Next' பட்டனை அழுத்தவும்.

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil
Create a Strong Password

பாதுகாப்பான பாஸ்வேர்டு அமைத்தல்: (Create a Strong Password) 

ஸ்டெப் 11: இது மிக முக்கியமான ஸ்டெப். உங்களின் புதிய மெயில் ஐடிக்கு ஒரு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் (Strong password creation) உருவாக்க வேண்டும். ஆங்கிலப் பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் @, # போன்ற குறியீடுகள் (உதாரணம்: Tech@2026) கலந்தவாறு ஒரு பாஸ்வேர்டை டைப் செய்து 'Next' கொடுக்கவும். புதிய [Infinix GT 50 Pro கேமிங் போன்] வாங்கினாலும் இதே பாஸ்வேர்டை வைத்து தான் லாகின் செய்ய வேண்டும், எனவே இதை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil
Add Phone Number and Accept Terms

விதிமுறைகளை ஏற்று முடித்தல்: (Add Phone Number and Accept Terms) 

ஸ்டெப் 12: அடுத்த பக்கத்தில் உங்கள் மொபைல் நம்பரை இணைக்கச் சொல்லும். கீழே ஸ்க்ரோல் செய்து 'Yes, I'm in' என்பதைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் நம்பர் காட்டி OTP சரிபார்க்கப்பட்டால் அதை கன்ஃபார்ம் செய்யவும். (அல்லது இப்போதைக்கு வேண்டாம் என்றால் 'Skip' கொடுக்கலாம்).

how to create new email id gmail account in mobile step by step full tutorial for beginners in tamil

ஸ்டெப் 13: இறுதியாக உங்களின் பெயர் மற்றும் புதிய மெயில் ஐடி காட்டப்படும். 'Next' கொடுத்துவிட்டு, அடுத்த பக்கத்தில் உள்ள கூகுளின் விதிமுறைகளை முழுமையாகப் படித்துவிட்டு, கீழே உள்ள நீல நிற 'I agree' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! நீங்கள் யாருடைய உதவியும் இல்லாமல் உங்கள் புதிய "Email ID "ஜிமெயில் அக்கவுண்டை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக