மிரட்டி விட்டாப்ல.. 6500mAh பேட்டரி.. லிக்விட் கூலிங்.. 50 எம்பி கேமராவுடன் Infinix GT 50 Pro ரிலீஸ்!

Infinix GT 50 Pro: 144Hz அமோலெட் டிஸ்பிளே, டைமென்சிட்டி 8400 சிப்செட், லிக்விட் கூலிங் மற்றும் 6500mAh பேட்டரியுடன் முழு விபரம்.

infinix gt 50 pro gaming smartphone with dimensity 8400 ultimate 6500mah battery fast charging specifications price in tamil, மிரட்டி விட்டாப்ல.. 6500mAh பேட்டரி.. லிக்விட் கூலிங்.. 50 எம்பி கேமராவுடன் Infinix GT 50 Pro ரிலீஸ்!

இன்பினிக்ஸ் (Infinix) கடந்த ஆண்டு வெளியான ஜிடி 30 ப்ரோ மாடலின் தொடர்ச்சியாக, கேமிங் பிரியர்களுக்காக இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட், லிக்விட் கூலிங் மற்றும் பெரிய பேட்டரியுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முழுமையான அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Infinix GT 50 Pro Price and Availability

விலை விபரங்கள்: (Infinix GT 50 Pro Price) இந்த ஸ்மார்ட்போன் பிளாக் அபேஸ், ரெட் பிளேஸ் மற்றும் சில்வர் கிளேசியர் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ.35,000 ஆரம்ப விலையில் (Starting price) அறிமுகமாகியுள்ளது. 512 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.40,000 விலைக்கு கிடைக்கிறது.

Gaming and Liquid Cooling

கேமிங் மற்றும் லிக்விட் கூலிங்: (Gaming and Liquid Cooling) வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக ஓபன்-கட் பிரஷர்-சென்ஸ் ஜிடி ட்ரிக்கர் (Shoulder triggers) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் ஆடும்போது ஹீட் ஆகாமல் இருக்க ஹைட்ரோஃப்ளோ லிக்விட் கூலிங் (Liquid cooling) சிஸ்டம் மற்றும் சிறந்த சிக்னலுக்காக என்1 நெட்வொர்க் சிப் கிடைக்கிறது.

Massive Battery and Display

பெரிய பேட்டரி மற்றும் டிஸ்பிளே: (Massive Battery and Display) 6500mAh பேட்டரியை (Massive battery) இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. அமேசானில் விற்பனையாகும் [TCL 65 இன்ச் 4K டிவிக்கு பிரம்மாண்ட தள்ளுபடி] கிடைப்பது போல, இதில் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் அருமையான காட்சி அனுபவம் கிடைக்கும்.

மேலும் படிக்க: 👉 Vi வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! சத்தமே இல்லாமல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய Vodafone Idea!

infinix gt 50 pro gaming smartphone with dimensity 8400 ultimate 6500mah battery fast charging specifications price in tamil

Infinix GT 50 Pro Full Specifications

முழுமையான சிறப்பம்சங்கள்: (Full Specifications) இந்த மிரட்டலான ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு முக்கிய அம்சங்களும் (Specifications) இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • டிஸ்பிளே: 6.78 இன்ச் அமோலெட் எல்டிபிஎஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i புரொடெக்சன்.
  • சிப்செட்: 4என்எம் மீடியாடெக் டைமென்சிட்டி 8400 அல்டிமேட் (MediaTek Dimensity 8400 Ultimate) மற்றும் மாலி-ஜி720 எம்சி7 ஜிபியு.
  • ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான XOS 16 ஓஎஸ் (Android 16 OS).
  • கேமரா: ஓஐஎஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா. முன்பக்கத்தில் 13 எம்பி செல்பீ கேமரா (Selfie camera).
  • மெமரி: 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி / 512 ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ்.
  • இதர வசதிகள்: இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் பிளாஸ்டர், 10W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸுக்கான ஐபி64 (IP64 rating) ரேட்டிங்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக