Tariff Hike 2026: Vodafone Idea அதிரடி ரீசார்ஜ் கட்டண உயர்வு

Vodafone Idea ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணத்தை உயர்த்தியும், பலன்களைக் குறைத்தும் அதிர்ச்சியளித்துள்ளது. புதிய ரூ.325 மற்றும் சென்னைக்கான ரூ.2180

vodafone idea vi prepaid plans price hike 2026 new budget plans and details in tamil, Tariff Hike 2026: Vodafone Idea அதிரடி ரீசார்ஜ் கட்டண உயர்வு

இந்திய டெலிகாம் ஆபரேட்டரான வோடபோன் ஐடியா (Vodafone Idea), புதிய பிராட்பேண்ட் தளங்களுடன் சுமார் 98 சதவீத 4G மக்கள் தொகை கவரேஜை எட்டியுள்ள நிலையில், தனது ப்ரீபெய்ட் சலுகைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. திட்டங்களின் பலன்களைக் குறைத்தும், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும், கட்டணங்களை உயர்த்தியும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திருத்தங்கள் சில குறிப்பிட்ட வட்டங்களுக்கு (Circle-specific) மட்டுமே பொருந்தும் என்பதால், பயனர்கள் தங்கள் எண்ணிற்கான பலன்களை Vi ஆப் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Vodafone Idea Increases Pricing of Prepaid Packs

ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு: (Prepaid Packs Price Hike) வோடபோன் ஐடியா நிறுவனம் தனது குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

  • ரூ.649 பிளான் ரூ.670 ஆக உயர்வு: ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட்டங்களில் ரூ.649 பிளானின் விலை ரூ.670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 'Vi NonStop Hero' பிளான் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் 4G/5G டேட்டா, அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது. அசாம், ஹிமாச்சல், ஒடிசா போன்ற வட்டங்களில் இது ரூ.649-க்கே NonStop Hero பலன்களுடன் கிடைக்கிறது. மற்ற வட்டங்களில் ரூ.649 பிளான் தினமும் 2GB என்ற அளவிலேயே தொடர்கிறது.
  • ரூ.1020 பிளான் ரூ.1050 ஆக உயர்வு: சென்னை பயனர்களுக்கு (Chennai users) முன்பு ரூ.1020-க்கு கிடைத்த திட்டம் இப்போது ரூ.1050 ஆக திருத்தப்பட்டுள்ளது. இது 84 நாட்களுக்கு அன்லிமிடெட் 4G/5G டேட்டா, அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.

NonStop Hero Plans Shift to Hero Benefits

திட்டங்களின் பலன்கள் குறைப்பு: (Plan Benefits Downgrade) வோடபோன் ஐடியா சில 'NonStop Hero' திட்டங்களை சாதாரண 'Hero Unlimited' ஆக குறைத்து வெச்சி செஞ்சிட்டாங்க. அதாவது விலையை மாற்றாமல் அன்லிமிடெட் டேட்டாவை ரத்து செய்துள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட்டங்களில் ரூ.696, ரூ.795, ரூ.979, ரூ.994, ரூ.996, ரூ.998, மற்றும் ரூ.1198 ஆகிய திட்டங்கள் இதன்கீழ் குறைக்கப்பட்டுள்ளன.

  • ரூ.696 பிளான்: 56 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் Amazon Prime Lite.
  • ரூ.795 பிளான்: 56 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா மற்றும் Vi Movies & TV Super (SonyLIV, ZEE5 உட்பட 16 OTT).
  • ரூ.979, ரூ.996, ரூ.998 பிளான்கள்: 84 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டாவுடன் முறையே Vi Movies, Prime Lite, SonyLIV சந்தாக்கள் கிடைக்கும்.
  • ரூ.994 மற்றும் ரூ.1198 பிளான்கள்: முறையே 84 நாட்களுக்கு JioHotstar மற்றும் 70 நாட்களுக்கு Netflix சந்தாவுடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.

Vodafone Idea Cheap Alternative Plan

மலிவான மாற்றுத் திட்டம்: (Cheaper Alternative Plan) ஆந்திரா, கர்நாடகா, சென்னை, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உட்பட பல வட்டங்களில் முன்பு இருந்த ரூ.1197 NonStop Hero திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சில வட்டங்களில் ரூ.1005 என்ற புதிய திட்டம் (New cheaper alternative plan) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 84 நாட்களுக்கு அன்லிமிடெட் 4G/5G டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது.

மேலும் படிக்க: 👉 சென்னைக்கே டஃப் கொடுக்கும் திருச்சி! தமிழ்நாட்டின் முதல் Dolby Cinema திறப்பு!

vodafone idea vi prepaid plans price hike 2026 new budget plans and details in tamil

Vi New Prepaid Plans

புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்: (New Prepaid Plans) வாங்குனா இப்படி ஒரு பிளான் வாங்கனும் என்று அனைத்து தரப்பு மக்களுக்காகவும் புதிய திட்டங்களை Vi அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ரூ.325 பிளான்: அனைத்து வட்டங்களுக்கும் பொருந்தும் இந்த பட்ஜெட் திட்டம் 28 நாட்களுக்கு 10GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 SMS வழங்குகிறது.
  • ரூ.2099 மற்றும் ரூ.2180 பிளான்கள்: குறிப்பிட்ட வட்டங்களுக்காக ரூ.2099 பிளானும், தமிழ்நாடு மற்றும் சென்னை பயனர்களுக்காக (Tamil Nadu and Chennai users) ரூ.2180 பிளானும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டுமே 180 நாட்களுக்கு முழுநேர அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன.
  • ரூ.44 கிரிக்கெட் பேக்: கிரிக்கெட் பிரியர்களுக்கான இந்த ஆட்-ஆன் பேக் 1 நாள் வேலிடிட்டியுடன் 1GB டேட்டாவை வழங்குகிறது. அத்துடன் 28 நாட்களுக்கு JioHotstar சந்தாவும் (JioHotstar subscription) இலவசமாகக் கிடைக்கும்.
மேலும் அதிகாரப்பூர்வ விபரங்களுக்கு: 👉 Vi இணையதளத்தைப் பார்வையிடவும்

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக