ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகளில் என்னதான் படம் பார்த்தாலும், தியேட்டரில் கிடைக்கும் அந்த பிரம்மாண்டமான அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது. அந்த வகையில், சென்னைக்கே டஃப் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) திருவெறும்பூரில் உள்ள எல்.ஏ. சினிமா (LA Cinemas) வளாகத்தில் அட்டகாசமாகத் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல் Dolby Cinema LA Cinema Trichy
First Dolby Cinema in Tamil Nadu
தமிழ்நாட்டின் முதல் டால்பி தியேட்டர்: (First Dolby Cinema in Tamil Nadu) பாத்தா இப்படி ஒரு தியேட்டர்ல படம் பாக்கணும் என்று சொல்லும் அளவிற்கு, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை முந்தி திருச்சி மக்கள் கொடுத்து வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்தியாவில் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த அதிநவீன வசதி (Advanced cinema technology) இருந்தது. தற்போது நான்காவதாக தமிழ்நாட்டிற்கு இந்த பிரம்மாண்டமான திரையரங்கம் (Massive theatre) வந்துள்ளது உள்ளூர் சுற்றுலா மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
Jio வாடிக்கையாளர்களுக்கு ஷாக்: 👉 சத்தமே இல்லாமல் Jio செய்த வேலை! ரூ.195 ரீசார்ஜ் பிளானில் வேலிடிட்டி குறைப்பு!
Dual Dolby Vision Projection
டூயல் டால்பி விஷன் ப்ரொஜெக்ஷன்: (Dual Dolby Vision Projection) சாதாரண தியேட்டர்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த டால்பி தியேட்டரானது டூயல் E3LH டால்பி விஷன் ப்ரொஜெக்ஷன் (Dual E3LH projection system) மற்றும் ஸ்கோப் ஸ்க்ரீன் (Scope screen) ஆகிய மாஸான தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது திரையில் தோன்றும் காட்சிகளுக்கு அபாரமான வண்ணங்களையும், ஆழமான கருப்பு நிறத்தையும், மிகத் தெளிவான வெளிச்சத்தையும் (Ultra-clear brightness) வழங்குகிறது. நிஜ வாழ்க்கையில் நடப்பது போலவே ஒரு யதார்த்தமான அனுபவத்தை இது கொடுக்கும். இதில் 456 இருக்கைகள் மற்றும் டால்பி 3D ஆதரவும் (Dolby 3D support) உள்ளது.
Dolby Atmos Immersive Sound
டால்பி அட்மாஸ் அதிநவீன ஒலி: (Dolby Atmos Immersive Sound) இந்த தியேட்டரின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் ஒலி அமைப்பு தான். டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமானது (Dolby Atmos sound) ஒலியை திரையரங்கின் அனைத்து திசைகளிலும், மேற்கூரையிலிருந்து (Overhead sound) கூட சீராகப் பரவச் செய்கிறது. இதனால் படத்தின் சத்தமானது பார்வையாளர்களைச் சுற்றிச் சுழன்று, தியேட்டரை அதிர வைத்து ஹாலிவுட் தரத்திலான ஒரு மாயாஜால உலகிற்குள் நம்மை முழுமையாக மூழ்கச் செய்யும்.
Award Winning Architecture
விருது வென்ற வடிவமைப்பு: (Award Winning Architecture) வெறும் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இந்த திரையரங்கின் வடிவமைப்பும் உலகத் தரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான தியேட்டரை வடிவமைத்ததற்காக மும்பையைச் சேர்ந்த பிரபல ஆர்க்கிடெக்ட் சக்திஸ் செட்டி (Architect Sakthis Shetty) அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் பெரிய பட்ஜெட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை அதன் முழுமையான தொழில்நுட்பத் தரத்துடன் ரசிக்க மக்கள் பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
