இந்திய ஆடியோ கேட்ஜெட் சந்தையில் Realme நிறுவனம் தனது லேட்டஸ்ட் TWS இயர்பட்ஸான Realme Buds T500 Pro மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. வெளியான முதல் நாளே முந்தைய மாடலை விட 230% அதிக விற்பனையைப் பதிவு செய்து சந்தையில் ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது. போட்டி நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு இந்த இயர்பட்ஸில் உள்ள பல அட்டகாசமான அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
Realme Buds T500 Pro Record Breaking Day 1 Sales
ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ விற்பனையில் பிரம்மாண்ட சாதனை: (Record Breaking Day 1 Sales) ஒரு புதிய இயர்பட்ஸ் வெளியான முதல் நாளே இந்த அளவிற்கு விற்பனையாவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைப்படி, இந்த Realme Buds T500 Pro முந்தைய மாடல்களை விட முதல் நாள் விற்பனையில் (First-day sales) 230% என்ற அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, ரியல்மி அதிகாரப்பூர்வ தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் என அனைத்து முன்னணி விற்பனை தளங்களிலும் வாடிக்கையாளர்கள் இதை போட்டிபோட்டு வாங்கியுள்ளனர்.
50dB Active Noise Cancellation
50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்: (50dB Active Noise Cancellation) இசைப்பிரியர்களைக் கவரும் வகையில் இந்த மாடலில் அல்ட்ரா-வைட்பேண்ட் 50dB அடாப்டிவ் ANC (Adaptive active noise cancellation) தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிச்சத்தங்கள் ஏதுமின்றி பாடல்களைத் துல்லியமாகக் கேட்க முடியும். மேலும் வாய்ஸ் கால்களின் போது தெளிவான ஆடியோ கிடைக்க, இதில் 6-மைக்ரோஃபோன் நாய்ஸ் ரிடக்ஷன் சிஸ்டம் (6-microphone noise reduction system) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் பேசும்போதும் உங்கள் குரல் தெளிவாகக் கேட்கும்.
High Resolution Audio and AI Features
ஆடியோ மற்றும் AI வசதிகள்: (High Resolution Audio and AI Features) வாங்குனா இப்படி ஒரு இயர்பட்ஸ் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, இதில் 12.4mm டைட்டானியம் பிளேட்டட் டிரைவர்கள் (Titanium-plated drivers) பயன்படுத்தப்பட்டுள்ளன. இது Hi-Res ஆடியோ தரச் சான்றிதழ் மற்றும் LHDC 5.0 கோடெக் சப்போர்ட் கொண்டது. இதில் 360° ஸ்பேஷியல் ஆடியோ (360° Spatial Audio) அனுபவமும் கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, 34 மொழிகளை ஆதரிக்கும் இன்பில்ட் AI மொழிபெயர்ப்பு (AI translation) வசதியும், மனதை அமைதிப்படுத்தும் மைண்ட்ஃப்ளோ (MindFlow audio mode) மோடும் இதில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.
Battery Life and Fast Charging
பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்: (Massive Battery Life and Fast Charging) இந்த பிரம்மாண்டமான இயர்பட்ஸில் மொத்தம் 56 மணிநேர பிளேபேக் (56 hours total playback) கிடைக்கிறது. அதாவது சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து நீங்கள் தொடர்ந்து பல நாட்களுக்கு சார்ஜ் செய்யாமலேயே பாடல்களைக் கேட்கலாம். அவசரமாக வெளியே செல்லும்போது வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், 10 மணிநேர பிளேபேக் (Fast charging capabilities) வரை கிடைக்கும் என ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Price and Availability in India
இந்தியாவில் விலை மற்றும் விற்பனை: (Price and Availability in India) லேட்டஸ்ட் புளூடூத் 6.1 (Bluetooth 6.1), ஒரே நேரத்தில் 3 சாதனங்களில் இணைக்கும் மல்டிபாயிண்ட் கனெக்ஷன், IP55 தண்ணீர் எதிர்ப்பு மற்றும் 45ms கேமிங் மோட் என எண்ணற்ற வசதிகள் இதில் உள்ளன. இத்தனை அம்சங்கள் கொண்ட இந்த Realme Buds T500 Pro இயர்பட்ஸ் இந்தியாவில் ரூ.2,599 என்ற அறிமுக விலையில் (Introductory price) கிடைக்கிறது. Flipkart, Amazon, Myntra மற்றும் Realme.com உள்ளிட்ட தளங்களில் இதை நீங்கள் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.