இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகமாகியுள்ள அதிநவீன பிராசஸர், முரட்டுத்தனமான 9000mAh பேட்டரி மற்றும் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் வந்துள்ள இந்த போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் ஆஃபர் விவரங்களை இப்போது முழுமையாகப் பார்க்கலாம்.
POCO X8 Pro Max 5G Specifications
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள்: புதிய மொபைல் வாங்க நினைப்பவர்கள் முதலில் தேடும் முழு விவரக்குறிப்புகளின் பட்டியல் இதோ:
- டிஸ்பிளே: 6.83-இன்ச் 1.5K (1280x2772 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு
- பிராசஸர்: ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500s 3nm சிப்செட்
- செயல்திறன் ஸ்கோர்: 3 மில்லியனுக்கும் அதிகமான ஆன்டுடு புள்ளிகள் (3 Mn+ AnTuTu score)
- ரேம்: 12GB LPDDR5X Ultra RAM
- ஸ்டோரேஜ்: 256GB மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ்
- மெயின் கேமரா: 50MP Sony IMX மெயின் கேமரா (OIS வசதியுடன்) + 8MP அல்ட்ரா வைடு கேமரா
- செல்பி கேமரா: 20MP பிரண்ட் கேமரா
- பேட்டரி: 9000mAh மெகா பேட்டரி (Mega battery)
- சார்ஜிங்: 100W அதிவேக பாஸ்ட் சார்ஜிங், 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- வடிவமைப்பு: பின்புறம் ஒளிரும் டைனமிக் ஆர்ஜிபி லைட்ஸ் (Dynamic RGB lights), அலுமினியம் மிடில் பிரேம், 8.2mm மெல்லிய தடிமன்
- பாதுகாப்பு தரம்: IP66, IP68, IP69 மற்றும் IP69K வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்
- ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3)
- ஆஃபர் ஆரம்ப விலை: ரூ.42,999 முதல்
POCO X8 Pro Max 5G Display
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போனில் 6.83-இன்ச் 1.5K அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது அல்ட்ரா-ஸ்மூத் அனுபவத்தை வழங்கும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைக் கொண்டுள்ளது. டாப் 20 மொபைல் கேம்களை 120fps வேகத்தில் துளி அளவும் லேக் இல்லாமல் விளையாட இந்த திரை முழு ஒத்துழைப்பு தருகிறது.
POCO X8 Pro Max 5G Processor
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி பிராசஸர்: இந்தியாவிலேயே முதல் முறையாக அதிநவீன மீடியாடெக் டைமன்சிட்டி 9500s (India's First MediaTek Dimensity 9500s) சிப்செட் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது செயல்திறன் சோதனையில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆன்டுடு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் உள்ள அதிவேக 12GB LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் மூலம் மல்டி டாஸ்கிங் மற்றும் ஹெவி கேமிங்கை மிக எளிதாகக் கையாள முடியும்.
POCO X8 Pro Max 5G Camera
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி கேமரா: புகைப்படங்களுக்காக இதில் OIS வசதி கொண்ட 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 20MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் இதில் உண்டு.
POCO X8 Pro Max 5G Battery
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி பேட்டரி: இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதில் இடம்பெற்றுள்ள 9000mAh மெகா பேட்டரிதான். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் பேக்கப்பை இது வழங்குகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும் சாதனம் வெறும் 8.2mm மெல்லிய தடிமனுடன் கைகளில் கச்சிதமாகப் பொருந்துகிறது. இதனை சார்ஜ் செய்ய 100W அதிவேக சார்ஜிங் வசதி உள்ளதால், வெறும் 30 நிமிட சார்ஜிங்கில் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். மேலும் பிற சாதனங்களை சார்ஜ் செய்ய 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
இதையும் படியுங்கள்: ஜியோ சிம் யூஸ் பண்றீங்களா? 1000 டிவி சேனல்கள், ஓடிடி அள்ளி தரும் பிளான்!
POCO X8 Pro Max 5G Design
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி வடிவமைப்பு: போனின் பின்புற பேனலில் இளைஞர்களைக் கவரும் வகையில் டைனமிக் விளக்குகள் (Dynamic RGB lights) அமைக்கப்பட்டுள்ளன. கேமிங்கின் போதும், புதிய நோட்டிபிகேஷன் வரும்போதும் இது அழகாக ஒளிர்கிறது. மேலும் அலுமினியம் மிடில் பிரேம் கொண்டு வலிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புகளையும் பெற்றுள்ளது.
POCO X8 Pro Max 5G Price and Offers
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி விலை மற்றும் சலுகைகள்: பிளிப்கார்ட் தளத்தில் இதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் அசல் விலையான ரூ.57,999-ல் இருந்து ரூ.48,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 12GB RAM + 512GB மாடல் ரூ.52,999 விலையில் கிடைக்கிறது.
ஆனால் அறிமுகச் சலுகையாக வங்கி கார்டு தள்ளுபடிகளைப் பயன்படுத்தும் போது, இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.42,999 ஆகக் குறைகிறது! மேலும் பழைய மொபைலுக்கு ரூ.47,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பும், மாதத்திற்கு ரூ.16,770 முதல் நோ-காஸ்ட் இஎம்ஐ (No-Cost EMI) வசதியும் உண்டு. ரூ.43,000 பட்ஜெட்டில் அசுர பேட்டரியும் தலைசிறந்த வேகமும் கொண்ட போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு தரமான சாய்ஸ் ஆகும்.!

