Samsung Exynos 2700 Chipset: ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் தென் கொரிய நிறுவனமான சாம்சங் (Samsung), தனது அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் போனான கேலக்ஸி S27 சீரிஸின் (Galaxy S27 Series) இதயமான புதிய Samsung Exynos 2700 Chipset (எக்ஸினோஸ் 2700 சிப்செட்) சிப்செட்டின் முழுவீச்சிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் மீதான சார்பைக் குறைக்கவும், தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்தவும் இந்த முறை எக்ஸினோஸ் உற்பத்தியை முந்தைய மாடலை விட 10% அதிகமாக சாம்சங் உயர்த்தியுள்ளது.
வரவிருக்கும் கேலக்ஸி S27 வரிசையில் புதிதாக ஒரு 'ப்ரோ' மாடல் இணைய உள்ள நிலையில், இந்த புதிய 2nm பிராசஸரின் சிறப்பம்சங்கள் மற்றும் உற்பத்தி விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Samsung Exynos 2700 Chipset Specifications
சாம்சங் எக்ஸினோஸ் 2700 சிப்செட் அம்சங்கள்: இந்த புதிய தலைமுறை சிப்செட் சாம்சங் பவுண்ட்ரியின் அதிநவீன 2nm இரண்டாம் தலைமுறை SF2P தயாரிப்பு முறையில் (SF2P Process) உருவாக்கப்படுகிறது. இது முந்தைய SF2 கட்டமைப்பை விட 12% கூடுதல் செயல்திறன் (Performance) மற்றும் 25% குறைந்த பேட்டரி பயன்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் சிப்பின் ஒட்டுமொத்த பரப்பளவு 8% குறைக்கப்பட்டுள்ளது. பெஞ்ச்மார்க் சோதனையான கீக்பெஞ்ச் 6 மல்டி கோர் பிரிவில் 14,000 புள்ளிகளுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ள கேலக்ஸி S27, S27 பிளஸ் மற்றும் புதிய S27 ப்ரோ ஆகிய போன்களில் இந்த சக்திவாய்ந்த பிராசஸர் (Powerful processor) பொருத்தப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்: POCO X8 Pro Max 5G: ரூ.49,000 போன் வெறும் ரூ.42,999-க்கு! ஆஃபர் விபரம்!
Samsung has started mass production of Exynos 2700 for Galaxy S27 series 👀
— Abhishek Yadav (@yabhishekhd) October 2, 2026
- Producing 10% more compared to Exynos 2600
- Galaxy S27, S27+ and S27 Pro will use Exynos 2700 in Korea, India and Europe
- US and China models expected to get Snapdragon 8 Elite Gen 6
- Galaxy S27… pic.twitter.com/eRFYEXaqGo
Samsung Galaxy S27 Series Models
Exynos 2700 Chipset Performance Benchmark
செயல்திறன் மற்றும் பெஞ்ச்மார்க் விவரங்கள்: சாம்சங் உள்நாட்டில் நடத்திய கீக்பெஞ்ச் 6 (Geekbench 6) சோதனையில், குவால்காமின் டாப் மாடலான ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் 6-ஐ விட எக்ஸினோஸ் 2700 சிப்செட்டின் மல்டி கோர் ஸ்கோர் 9.5% அதிகமாகப் பதிவாகியுள்ளது. குவால்காம் சிப் மல்டி கோரில் 12,856 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், எக்ஸினோஸ் 2700 சுமார் 14,000 புள்ளிகளைத் தாண்டி மிரட்டியுள்ளது. இதன் மூலம் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI Processing) வேலைகளில் இது அதிவேக அனுபவத்தைத் தரும் என உறுதியாகத் தெரிகிறது.
Samsung 2nm SF2P Foundry Process
அதிநவீன 2 நானோமீட்டர் தொழில்நுட்பம்: இந்த எக்ஸினோஸ் 2700 சிப்செட் சாம்சங்கின் நவீன 2nm SF2P முறையில் செதுக்கப்படுகிறது. இதன் வேபர் உற்பத்தி தற்போது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளதால், இன்னும் 3 முதல் 4 மாதங்களில் முழு சிப்களும் தயாராகிவிடும். இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ள கேலக்ஸி S27 சீரிஸ் போன்களுக்கு எந்த தட்டுப்பாடும் இன்றி இந்த சிப்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரத் தயாராகிவிடும்.

