ஜியோ போன்ற தனியார் நிறுவனங்களின் வாய்ஸ்-ஒன்லி திட்டங்களை விடக் கூடுதல் நன்மைகளைக் குறைந்த விலையில் அள்ளித்தரும் இந்த பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan)
பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டத்தின் முழு விவரங்கள்: இந்த நீண்ட நாள் திட்டமானது முழுமையாக 300 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்கிறது. இதன் மூலம் மாதத்திற்கு வெறும் ரூ.150 மட்டுமே செலவாகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை (Roaming Calls) இலவசமாகப் பேசிக் கொள்ளலாம். அழைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த தேர்வாக விளங்குகிறது.
இதையும் படியுங்கள்: POCO X8 Pro Max 5G: ரூ.49,000 போன் வெறும் ரூ.42,999-க்கு! ஆஃபர் விபரம்!
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan)
டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள்: இந்த திட்டத்தில் அழைப்புகள் மட்டுமின்றி பயனர்களுக்கு அவசரத் தேவைக்காக மொத்தம் 32GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 32GB டேட்டா அளவு முழுவதும் தீர்ந்துவிட்டாலும் கூட, பயனர்கள் 40 Kbps வேகத்தில் தடையின்றி தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் பொதுவாக நீண்ட நாள் திட்டங்களில் எஸ்எம்எஸ்கள் மொத்தமாக வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு நாள்தோறும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் வீதம் 300 நாட்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுவது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 Prepaid Plan)
ஜியோ ரூ.1748 திட்டத்துடன் ஒரு ஒப்பீடு: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்குப் போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1748 விலையில் ஒரு நீண்ட நாள் திட்டத்தை வழங்குகிறது. இதில் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள் கிடைத்தாலும், இதில் துளி அளவும் டேட்டா நன்மை வழங்கப்படுவதில்லை. இதனால் போஸ்ட் டேட்டா வசதியும் இதில் கிடைக்காது. மேலும் இதில் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடையாது; 336 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே 3600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ ஜியோவை விட ரூ.249 குறைவான விலையில் 32GB டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்கி அதிக லாபகரமான தேர்வாக முன்னிலை வகிக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan)
பிஎஸ்என்எல் ரூ.2399 கூடுதல் வேலிடிட்டி சலுகை: தினசரி டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்கி வருகிறது. வழக்கமாக 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்த இந்த திட்டத்திற்கு, தற்போது கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டி சேர்க்கப்பட்டு மொத்தம் 380 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் நாள்தோறும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. தினசரி 2GB டேட்டா முடிந்த பிறகும் 40 Kbps வேகத்தில் டேட்டா பயன்பாட்டைப் பெற முடியும். நீண்ட வேலிடிட்டியுடன் கூடிய வாய்ஸ் கால்களை மட்டுமே விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

