ஸ்மார்ட்போன் சந்தையில் முதன்மை பிளாக்ஷிப் மாடல்களை உருவாக்கி வரும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த தலைமுறை சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா (Samsung Galaxy S27 Ultra) போனில் மிக பிரம்மாண்டமான வடிவமைப்பு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புதிய கான்செப்ட் ரெண்டர் படங்களில், போனின் பின்புற கேமரா பகுதியில் ஒரு புத்தம் புதிய இரண்டாம் நிலை மினி டிஸ்பிளே (Rear secondary display) சேர்க்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த புதிய வடிவமைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Samsung Galaxy S27 Ultra Specifications
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா அம்சங்கள்: முன்பக்கத்தில் 6.9 இன்ச் அளவிலான மிகத் தெளிவான டைனமிக் அமோலெட் டிஸ்பிளே (6.9 inch QHD+ Dynamic AMOLED display) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் 3000 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் ஆர்மர் பாதுகாப்பு (Gorilla Glass Armor protection) கொடுக்கப்படலாம்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை தட்டையான பக்கவாட்டு பிரேம், பில்ட்-இன் எஸ்-பென் ஸ்டைலஸ் (Integrated S-Pen stylus) மற்றும் தூசு, நீரிலிருந்து பாதுகாக்கும் IP68 பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவை இதில் தொடரும் எனத் தெரிகிறது.
Samsung Galaxy S27 Ultra with a rear display.
— Saurav (@Saurav_DJ47) August 28, 2026
Imagine the camera island itself becoming a useful secondary screen:
• Notifications, time & battery
• Music controls and quick actions
• Main-camera selfies using it as a viewfinder
• QR codes, timers and other quick info… pic.twitter.com/IQLFkRGAGD
Samsung Galaxy S27 Ultra Rear Display
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா பின்பக்க டிஸ்பிளே: இந்த புதிய வடிவமைப்பின்படி கேமரா அமைப்பிற்கு அருகிலேயே சிறிய செகண்டரி அமோலெட் டிஸ்பிளே (Secondary AMOLED display) இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் நேரம், பேட்டரி சதவீதம் மற்றும் முக்கிய அறிவிப்புகளை (Notifications and battery info) போனைத் திருப்பாமலேயே பார்க்க முடியும்.
மேலும் மியூசிக் கன்ட்ரோல், டைமர், க்யூஆர் கோடு மற்றும் 200 மெகாபிக்சல் முதன்மை கேமராவைப் பயன்படுத்தி துல்லியமாக செல்ஃபி எடுப்பதற்கான வியூஃபைண்டர் (Main camera selfie viewfinder) போன்ற பல பயனுள்ள வசதிகளை இந்த பின்பக்க டிஸ்பிளே வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Realme C100i: ரூ.15,000 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே
Samsung Galaxy S27 Ultra Processor
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா பிராசஸர்: இந்த ஸ்மார்ட்போனில் 2nm முறையில் தயாராகும் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro processor) பொருத்தப்படலாம். இது மிகக் கடினமான கேமிங் மற்றும் ஏஐ செயல்பாடுகளைத் தடையின்றி இயக்கும்.
மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம் (Android 17 operating system) மற்றும் ஒன் யுஐ 9 மூலம் இது இயங்கும். அத்துடன் வழக்கம்போல 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் புதுப்பிப்புகள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
Samsung Galaxy S27 Ultra Camera
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா கேமரா: மிகத் துல்லியமான புகைப்படங்களுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 200 மெகாபிக்சல் பிரதான கேமரா (200MP OIS primary camera), 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5x ஆப்டிகல் ஜூமிங் வசதியுடைய 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம்.
அத்துடன் மேம்பட்ட இரவு நேரப் புகைப்பட வசதிகள் மற்றும் ஏஐ போட்டோகிராபி டூல்ஸ் (Galaxy AI photography suite) போன்ற அதிநவீன மென்பொருள் வசதிகளும் இதில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S27 Ultra Battery
சாம்சங் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா பேட்டரி: நீண்ட நேரம் நீடிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான 5700mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி (5700mAh silicon carbon battery) இதில் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதனை அதிவேகமாக நிரப்ப பாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் (Qi2 wireless fast charging) மற்றும் பிற சாதனங்களுக்கு சார்ஜ் பகிர்ந்தளிக்க உதவும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் இந்த மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.