POCO C95 Pro Display
போக்கோ சி95 ப்ரோ டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போனில் 6.9-இன்ச் HD+ (1600 x 720 பிக்சல்கள்) LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 825 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் பெரிய திரை சினிமா மற்றும் ஓடிடி தளங்களில் வீடியோக்களை ரசித்துப் பார்க்க மிகச் சிறந்த அவுட்புட்டை தருகிறது. மேலும் திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
POCO C95 Pro Processor
போக்கோ சி95 ப்ரோ பிராசஸர்: இதில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா 12nm (MediaTek Helio G91 Ultra) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3) தளத்தில் சீராக இயங்குகிறது. மல்டி டாஸ்கிங் மற்றும் அன்றாடப் பயன்பாடுகளுக்கு இது சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: சோனி கேமரா... AMOLED டிஸ்ப்ளே... 5400mAh பேட்டரி... 50W சார்ஜிங்... எந்தெந்த மாடல்கள்?
POCO C95 Pro RAM and Storage
போக்கோ சி95 ப்ரோ மெமரி மற்றும் சேமிப்பகம்: இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) விரிவாக்கம் மூலம் கூடுதலாக 16GB வரையிலும், மைக்ரோ எஸ்டி கார்டு வாயிலாக 2TB வரையிலும் மெமரியை எளிதாக அதிகரித்துக்கொள்ள முடியும்.
POCO C95 Pro Camera
போக்கோ சி95 ப்ரோ கேமரா அமைப்பு: புகைப்படங்களை எடுப்பதற்கு பின்புறத்தில் எல்இடி பிளாஷ் கொண்ட 50MP மெயின் ஏஐ கேமரா (Main AI Camera) மற்றும் கூடுதல் செகண்டரி கேமரா அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் தெளிவான வீடியோ கால்களை மேற்கொள்வதற்கு முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
POCO C95 Pro Battery Backup
போக்கோ சி95 ப்ரோ பேட்டரி பேக்கப்: இந்த போனின் மிகப்பெரிய பலமே இதில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட 7500mAh பேட்டரிதான். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் தாராளமாக நீடிக்கும் பேக்கப் தருகிறது.
POCO C95 Pro Fast Charging
போக்கோ சி95 ப்ரோ பாஸ்ட் சார்ஜிங்: இந்த பிரம்மாண்ட பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்வதற்கு 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 35 நிமிடங்களிலேயே ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் சார்ஜை நிரப்பிக் கொள்ள முடியும்.
POCO C95 Pro Reverse Wired Charging
போக்கோ சி95 ப்ரோ ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்: பயணங்களின் போது பிற ஸ்மார்ட்போன்கள் அல்லது இயர்பட்ஸ் போன்ற சாதனங்களை எளிதாக சார்ஜ் செய்து கொள்ள 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse wired charging) வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
POCO C95 Pro Build Quality
போக்கோ சி95 ப்ரோ வடிவமைப்பு மற்றும் தரம்: தூசி மற்றும் தண்ணீர் தெறிப்புகளைத் தாங்கும் வகையில் இந்த போன் IP64 ரேட்டிங் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. கூடுதலாக சைடு மவுண்டெட் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
POCO C95 Pro Price and Availability
போக்கோ சி95 ப்ரோ விலை மற்றும் விற்பனை: இதன் 6GB RAM + 128GB மெமரி வேரியண்ட் தொடக்க சலுகையாக 169 டாலராகவும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,246), 8GB RAM + 256GB மெமரி வேரியண்ட் 199 டாலராகவும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,130) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வெளிவந்துள்ளது. தற்போது குளோபல் சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த மாடல் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
