Realme Buds T500 Pro விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்

அதிரடி ஆஃபரில் 50dB ஏஎன்சி, 56 மணி நேர பேட்டரியுடன் ரூ.2,799 விலையில் அறிமுகமான புதிய Realme Buds T500 Pro இயர்பட்ஸின் முழு அம்சங்கள்

Realme Buds T500 Pro விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள், realme buds t500 pro price in india specifications 50db anc 56 hours battery life offers in tamil

Realme Buds T500 Pro : ரியல்மி நிறுவனம், தற்போது ஒரு அட்டகாசமான புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு அம்சங்களுடன் ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ (Realme Buds T500 Pro) அறிமுகமாகியுள்ளது.

அதாவது, பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் இந்த ரியல்மி இயர்பட்ஸ் இந்திய சந்தையில் வெறும் ரூ.2,799 விலையில் (Price at Rs. 2,799) விற்பனை செய்யப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் ஏப்ரல் 23 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.

மேலும் முதல் விற்பனையில் ரூ.200 சிறப்பு தள்ளுபடியும் (Rs. 200 discount offer) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே இந்த இயர்பட்ஸை குறைந்த விலையில் எளிதாக வாங்கிவிட முடியும். சாக்லேட், லெமன் கோலா மற்றும் ஆரஞ்சு மின்ட் (Orange Mint shades) போன்ற கண்கவர் நிறங்களில் இது கிடைக்கிறது.

Realme Buds T500 Pro Specifications

ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ அம்சங்கள்: தரமான 12.4எம்எம் டைட்டானியம் பூசப்பட்ட டயபிராம் (12.4mm titanium-plated diaphragm) வசதியுடன் ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ வெளிவந்துள்ளது. மேலும் சிறப்பான ஆடியோ தரத்திற்காக எல்எச்டிசி 5.0 கோடெக் (LHDC 5.0 codec) ஆதரவு இந்த சாதனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் 24-பிட் ஆடியோ மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் (Hi-Res Audio Wireless) தரச் சான்றிதழைப் பெற்று இந்த ரியல்மி இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் சீக்ரெட் ட்ரிக்: 👉 நேரம் வீணாகிறதா? யூடியூப்பில் Shorts Feed-ஐ நிரந்தரமாக மறைக்கும் அட்டகாசமான வசதி!

Realme Buds T500 Pro விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்

குறிப்பாக தேவையற்ற வெளிப்புற இரைச்சலைத் தடுக்க 50டிபி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (50dB Active Noise Cancellation) தொழில்நுட்பம் இந்த சாதனத்தில் உள்ளது. மேலும் இது உங்கள் காதுகளுக்கு ஏற்ப தானாகவே சத்தத்தை மாற்றியமைக்கும் அடாப்டிவ் ட்யூனிங் (AI-based adaptive tuning) வசதியைக் கொண்டுள்ளது.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் கேமரா இருப்பது போல, தெளிவான போன் கால்களைப் பேச சிக்ஸ்-மைக் செட்டப் (Six-microphone setup) மற்றும் ஏஐ நாய்ஸ் ரிடக்ஷன் (AI noise reduction) அம்சங்கள் இந்த இயர்பட்ஸில் உள்ளன.

Battery and Charging Support

பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி: மேலும் 56 மணி நேர மொத்த பேட்டரி ஆயுள் (56 hours total battery life) உடன் ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த இயர்பட்ஸ் நீண்ட நேரம் தடையற்ற பேட்டரி பேக்கப் வழங்கும். ஏஎன்சி வசதியை ஆன் செய்தால் 8 மணி நேரம் வரை செயல்படும்.

இந்த சாதனத்தில் 530எம்ஏஎச் கேஸ் பேட்டரி மற்றும் 62எம்ஏஎச் இயர்பட்ஸ் பேட்டரி (530mAh case and 62mAh earbuds battery) உள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி (USB Type-C charging) வசதியும் உள்ளது. எனவே இதை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

விலையேற்ற அதிர்ச்சி: 👉 வாங்குற ஐடியா இருந்தா உஷார்! அதிரடியாக விலையை ஏற்றிய மோட்டோரோலா.. எவ்ளோ தெரியுமா?

Realme Buds T500 Pro விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்

Connectivity and Gaming Features

கேமிங் மற்றும் கனெக்டிவிட்டி ஆதரவு: இந்த ரியல்மி இயர்பட்ஸ் 45எம்எஸ் அல்ட்ரா-லோ லேட்டன்சி (45ms ultra-low latency) வசதியுடன் வெளிவந்துள்ளது. இது தாமதமில்லாத மிகச் சிறந்த கேமிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

லேட்டஸ்ட் ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1 support) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 3 சாதனங்களை இணைக்கும் (Connect up to 3 devices) மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி ஆதரவு இந்த ரியல்மி பட்ஸில் உள்ளது.

ஐபி55 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP55 Dust and Water Resistance) உடன் இந்த ரியல்மி இயர்பட்ஸ் வெளிவந்துள்ளது. மேலும் மைண்ட்-ஃப்ளோ மோட் மற்றும் லைவ் டிரான்ஸ்லேஷன் (Live translation) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு இயர்பட்ஸும் 4.5 கிராம் எடை (Weight 4.5g) ஆகும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக