Nvidia RTX 5080 Nvidia GeForce Now Price: இந்திய கேமிங் சந்தையில் கேமர்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வரும் என்விடியா நிறுவனம், தற்போது ஒரு அட்டகாசமான புதிய கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. மற்ற கேமிங் நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு என்விடியா ஜிபோர்ஸ் நவ் (Nvidia GeForce Now in India) அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
அதாவது, விலை உயர்ந்த கம்ப்யூட்டர் அல்லது ஹார்டுவேர் தேவையில்லாமல், எந்த சாதாரண மொபைல் அல்லது டிவியிலும் ஹை-எண்ட் கேம்களை விளையாடும் வசதியுடன் இந்த கிளவுட் கேமிங் சேவை (Cloud gaming service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
RTX 5080 SuperPODs
பிரம்மாண்டமான வேகம் மற்றும் தொழில்நுட்பம்: இந்த புதிய கிளவுட் சேவையானது மிகவும் சக்திவாய்ந்த பிளாக்வெல் ஆர்டிஎக்ஸ் அடிப்படையில் (Blackwell RTX architecture) கட்டமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் அதிவேக ஆர்டிஎக்ஸ் 5080 சூப்பர்பாட்ஸ் (RTX 5080 SuperPODs) சர்வர்கள் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாதாரண கேமிங் கன்சோல்களை விட 3 மடங்கு அதிக வேகத்தில் (3x performance) கேம்களை மிக சீராக விளையாட முடியும்.
யூடியூப் சீக்ரெட் ட்ரிக்: 👉 நேரம் வீணாகிறதா? யூடியூப்பில் Shorts Feed-ஐ நிரந்தரமாக மறைக்கும் அட்டகாசமான வசதி!
Play 4500+ Games Without Downloading
4500-க்கும் மேற்பட்ட கேம்கள்: பிரம்மாண்டமான ஸ்டோரேஜ் தேவை இல்லாமல், ஸ்டீம் மற்றும் எபிக் கேம்ஸ் (Steam, Epic Games Store) போன்ற தளங்களில் உள்ள கேம்களை நேராக ஆன்லைனிலேயே ஸ்ட்ரீம் செய்யும் அட்டகாசமான வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த கேமையும் மொபைலில் டவுன்லோட் செய்யவோ, அப்டேட் (No downloads, no patches) செய்யவோ தேவையில்லை. சைபர்பங்க் 2077 போன்ற முன்னணி கேம்களை எந்தவித லேக் இல்லாமலும் இதில் விளையாடிக்கொள்ளலாம்.
🎧 அதிரடி ஆஃபர் இயர்பட்ஸ்: 👉 ஆஃபரை அள்ளி வீசுது ரியல்மி.. 56 மணி நேர பேட்டரி.. 50dB ஏஎன்சி.. Realme இயர்பட்ஸ் வாங்க சரியான நேரம்..
Cinematic Quality Streaming
டிஸ்பிளே மற்றும் வீடியோ தரம்: சிறந்த திரை அனுபவத்திற்காக, இதில் 5K துல்லியம் மற்றும் 120fps ரெஃப்ரெஷ் ரேட் (5K resolution at 120fps) ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. டிஎல்எஸ்எஸ் 4 தொழில்நுட்பம் (DLSS 4 Multi-Frame Generation) மூலம் கேமிங் கிராபிக்ஸ் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
மேலும் சினிமாட்டிக் குவாலிட்டி ஸ்ட்ரீமிங் மோட் (Cinematic Quality Streaming mode) மூலம், இண்டர்நெட் வேகம் குறைந்தாலும் கூட கேமிங் தரம் குறையாமல் இருக்கும் அதிநவீன ஏஐ வீடியோ செட்டிங்ஸ் (AI video enhancements) இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளன.
GeForce Now Plans and Price
திட்டங்கள் மற்றும் விலை விபரம்: இந்த அதிரடியான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இரண்டு பிரத்யேக கட்டண திட்டங்களை என்விடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படை பெர்பார்மன்ஸ் பாஸ் (Performance pass) விலை 90 நாட்களுக்கு வெறும் ரூ.999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து பிரீமியம் அம்சங்களையும் உள்ளடக்கிய அல்டிமேட் பாஸ் (Ultimate tier pass) விலை 90 நாட்களுக்கு ரூ.1,999 என விற்பனை செய்யப்படுகிறது. தற்போது முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த சேவை (Early access in India) வழங்கப்பட்டு வருகிறது.

