YouTube Shorts தொல்லையா? பொசுக்குனு ஆஃப் செய்யும் புதிய செட்டிங்.. எப்படி தெரியுமா?

நேரம் வீணாகிறதா? ஜீரோ நிமிடம் செட்டிங் மூலம் YouTube Shorts வீடியோக்களை மொத்தமாக முடக்கும் புதிய அப்டேட் குறித்த முழு விபரம்.

YouTube Shorts தொல்லையா? பொசுக்குனு ஆஃப் செய்யும் புதிய செட்டிங்.. எப்படி தெரியுமா?, how to disable youtube shorts completely in mobile zero minutes setting new update in tamil

பிரபல வீடியோ தளமான யூடியூப்பில் (YouTube platform) உள்ள ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பார்த்து நாம் பல மணி நேரங்களை வீணாக்குகிறோம். வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்த தற்போது ஒரு அட்டகாசமான புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

அதாவது, இனி யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களை உங்களின் மொபைல் ஆப்பில் இருந்து முழுமையாக மறைத்து வைக்கும் ஒரு புதிய வசதியை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் பயனர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Shorts முடக்கும் புதிய வசதி (Zero Minutes Setting)

பொதுவாக யூடியூப் ஆப்பில் ஷார்ட்ஸ் பார்ப்பதைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் என்ற செட்டிங் மட்டுமே முன்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜீரோ நிமிடம் செட்டிங் (Zero minutes setting) என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தவுடன், உங்கள் யூடியூப் ஆப்பில் இருந்து ஷார்ட்ஸ் பீட் (Shorts feed) நிரந்தரமாக மறைக்கப்படும். இதன்பின் ஹோம் ஸ்கிரீனில் உங்களால் ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பார்க்க முடியாது.

விலையேற்ற அதிர்ச்சி: 👉 டேப்லெட் வாங்குற ஐடியா இருந்தா உஷார்! பொசுக்குனு விலையை ஏத்திய மோட்டோரோலா!

how to disable youtube shorts completely in mobile zero minutes setting new update in tamil

முடக்குவது எப்படி? (How to disable YouTube Shorts)

இந்த அட்டகாசமான செட்டிங்கை ஆக்டிவேட் செய்ய, முதலில் உங்களின் யூடியூப் ஆப்பில் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் செல்ல வேண்டும். அதன்பின் டைம் மேனேஜ்மென்ட் (Time management) என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதில் டெய்லி லிமிட் (Daily limits) பகுதிக்குள் சென்று, ஷார்ட்ஸ் பீட் லிமிட் (Shorts feed limit) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் '0 minutes' என டைமரை செட் செய்தால் போதும், செட்டிங் மாறிவிடும்.

அமேசான் அதிரடி ஆஃபர்: 👉 ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்! 7000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்!

how to disable youtube shorts completely in mobile zero minutes setting new update in tamil

உலகளாவிய அப்டேட் (Global Update Rollout)

பயனர்கள் தங்களின் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும், தேவையில்லாத கண்டெண்ட்களை (Customise viewing experience) ஒழித்துக்கட்டவும் இந்த வசதி பெரிதும் உதவிபுரிகிறது.

இதுவரை குழந்தைகளுக்கான கட்டுப்பாடு வசதியில் (Parental controls) மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்து பெரியவர்களுக்கும், சாதரண கணக்குகளுக்கும் (Standard accounts) வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அம்சம் உலகளாவிய ரோல்அவுட் (Global rollout) செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மிக விரைவில் அனைத்து மொபைல்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக