Motorola டேப்லெட் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி!: இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் டேப்லெட்டுகளுக்கு (Motorola tablets) எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
Motorola டேப்லெட் வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி!
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மோட்டோ பேட் 60 ப்ரோ மற்றும் மோட்டோ பேட் 60 நியோ மாடல்களின் விலையை மோட்டோரோலா நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் உற்பத்தி செலவு அதிகரித்த காரணத்தால், இந்த எதிர்பாராத விலையேற்றம் (Price Hike in India) அமலுக்கு வந்துள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Moto Pad 60 Pro New Price in India
மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 Pro) டேப்லெட்டின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் முந்தைய விலையான ரூ.26,999-லிருந்து தற்போது ரூ.27,999 ஆக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இதன் டாப் எண்ட் மாடலான 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி (12GB RAM and 256GB storage) வேரியண்ட் முன்பு ரூ.28,999-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.3,000 உயர்த்தப்பட்டு ரூ.31,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
என்றாலும், விலையேற்றம் செய்யப்பட்ட இந்த இரண்டு வேரியண்ட்களுடனும் இலவச ஸ்டைலஸ் பென் (Bundled stylus pen) தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.
Price hike alert 🚨
— Sanju Choudhary (@saaaanjjjuuu) April 15, 2026
Motorola increased the prices of their tablets:
Pad 60 Pro with Pen :
8/128GB : ₹27,999
12/256GB : ₹31,999
Pad 60 Neo with Pen :
Wifi: ₹21,499
5G :₹23,999
It might increase one more time, if you are planning to get one buy it asap. pic.twitter.com/vgqz8Gcr00
அமேசான் அதிரடி ஆஃபர்: 👉 ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்! 7000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் Realme 5ஜி போனை வாங்க சரியான நேரம்!
Moto Pad 60 Neo New Price in India
ப்ரோ மாடலைத் தொடர்ந்து, குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்த மோட்டோ பேட் 60 நியோ (Moto Pad 60 Neo) டேப்லெட்டின் விலையும் தற்போது கணிசமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டின் வைஃபை ஒன்லி வேரியண்ட் (Wi-Fi-only version) தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.21,499 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சிம் கார்டு பயன்படுத்தும் 5ஜி ஆதரவு கொண்ட 8ஜிபி ரேம் வேரியண்ட் (5G variant with 8GB RAM) தற்போது ரூ.23,999 ஆக விலை ஏற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Motorola Price Hike for Reason
திடீர் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் என்னவென்றால், உலகளாவிய சந்தையில் டிஆர்ஏஎம் மற்றும் நாண்ட் மெமரி (DRAM and NAND memory) உதிரிபாகங்களின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏஐ டேட்டா சென்டர்களின் (AI data center expansion) அதீத வளர்ச்சியால் மெமரி சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தவிர, போக்குவரத்து செலவு மற்றும் நாணய மதிப்பு மாற்றங்களும் இந்த விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்த விலை மாற்றம் (Rising costs) காரணமாக, எதிர்காலத்தில் பட்ஜெட் டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கலாம் என டெக் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆதாரம் (Source): (X) Sanju Choudhary