ரூ.40,000-க்குள் சிறந்த போன் எது? Nord 6 vs Edge 70 Pro: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கியுள்ளது. பிளாக்ஷிப் அம்சங்கள், மாஸான டிசைன் மற்றும் அதிரடியான விலையுடன் ரூ.40,000 பட்ஜெட்டில் (Best phone under 40000) சக்கைப்போடு போட வந்துள்ளது.
ரூ.40,000-க்குள் சிறந்த போன் எது? Nord 6 vs Edge 70 Pro
Design and Build Quality
டிசைன் மற்றும் வடிவமைப்பு: (Design and Build Quality) மூன்று போன்களும் தனித்துவமான டிசைன்களைக் கொண்டுள்ளன. (Edge 70 Pro) மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஃபேப்ரிக் அல்லது மார்பிள் பினிஷ் மற்றும் வளைந்த திரையுடன் (Curved screen) வருகிறது. மேலும் அலுமினியம் பிரேம், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (MIL-STD-810H) மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸுக்கான ஐபி68 மற்றும் ஐபி69 (IP68 and IP69 rating) ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடலில் வித்தியாசமான கேமரா மாட்யூல் மற்றும் டாட் மேட்ரிக்ஸ் (Dot Matrix) டிஸ்பிளே உள்ளது. மெட்டல் பிரேம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆனால், ஐபி65 ரேட்டிங் மட்டுமே உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலில் கிரிஸ்டல் குவார்டு கிளாஸ் (Crystal Guard Glass) மற்றும் பிளாஸ்டிக் பிரேம் இருந்தாலும், பிரீமியம் டியூரபிலிட்டிக்காக ஐபி68 மற்றும் ஐபி69கே (IP69K rating) ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
AMOLED Display Comparison
அமோலெட் டிஸ்பிளே அம்சங்கள்: (AMOLED Display Comparison) மூன்று மாடல்களிலும் அருமையான 1.5K ரெசொலூஷன் (1.5K Resolution) கொண்ட அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் திரையுடன், பிரம்மாண்டமான 165Hz ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. நத்திங் மற்றும் மோட்டோரோலா மாடல்களில் 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதில் நத்திங் மாடல் அதிகபட்சமாக 5000 நிட்ஸ் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது.
Performance and OS Features
சிப்செட் மற்றும் ஓஎஸ்: (Performance and OS Features) பெர்ஃபார்மன்ஸைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலில் பவர்ஃபுல்லான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உள்ளது. மோட்டோரோலாவில் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் (Dimensity 8500-Extreme) சிப்செட் கிடைக்கிறது. இந்த இரண்டும் அன்டுடு ஸ்கோரில் (AnTuTu benchmark) கிட்டத்தட்ட ஒரே அளவிலான மிரட்டலான பெர்ஃபார்மன்ஸை தருகின்றன. நத்திங் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, இது மற்ற இரண்டை விட சற்று பின்தங்கியுள்ளது.
மூன்று போன்களுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் வருகின்றன. ஒன்பிளஸ் ஆக்சிஜன்ஓஎஸ் (OxygenOS 16), மோட்டோரோலா ஹலோ யுஐ (Hello UI), நத்திங் ஓஎஸ் 4.1 (Nothing OS) என தங்களது பிரத்யேக ஸ்கின்களில் இயங்குகின்றன.
மேலும் படிக்க: 👉 இனி பாஸ்போர்ட் நம்பர் கட்டாயம்! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய பான் கார்டு விதிகள் அமல்!
Full Specifications Comparison
முழுமையான சிறப்பம்சங்கள் ஒப்பீடு: (Full Specifications Comparison) மூன்று ஸ்மார்ட்போன்களின் அனைத்து தொழில்நுட்ப விபரங்களையும் கீழே உள்ள அட்டவணையில் விரிவாகக் காணலாம்:
| சிறப்பம்சங்கள் (Specifications) | OnePlus Nord 6 | Nothing Phone 4a Pro | Motorola Edge 70 Pro |
|---|---|---|---|
| சிப்செட் (Chipset) | ஸ்னாப்டிராகன் 8s Gen 4 SoC | ஸ்னாப்டிராகன் 7 Gen 4 SoC | மீடியாடெக் டைமென்சிட்டி 8500-Extreme |
| டிஸ்பிளே (Display) | 6.78-இன்ச் 1.5K AMOLED, 165Hz, 1,800 நிட்ஸ் | 6.83-இன்ச் 1.5K AMOLED, 120Hz, 5,000 நிட்ஸ் | 6.83-இன்ச் 1.5K AMOLED, 120Hz, 1,900 நிட்ஸ் |
| ரேம் (RAM) | 8GB/12GB LPDDR5X | 8GB/12GB LPDDR5X | 8GB/12GB LPDDR5X |
| ஸ்டோரேஜ் (Storage) | 256GB UFS 4.1 | 256GB/512GB UFS 3.1 | 128GB/256GB UFS 4.1 |
| பின்பக்க கேமரா (Rear Cameras) | 50MP OIS + 8MP (அல்ட்ரா வைடு) | 50MP OIS + 50MP டெலிபோட்டோ + 8MP (அல்ட்ரா வைடு) | 50MP OIS + 50MP (அல்ட்ரா வைடு) |
| முன்பக்க கேமரா (Front) | 32MP, 4K @60fps வீடியோ | 32MP, 4K @30fps வீடியோ | 50MP, 4K @60fps வீடியோ |
| பேட்டரி (Battery) | 9,000 mAh, 80W சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் | 5,400 mAh, 50W சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் | 6,500 mAh, 90W சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் |
| ரேட்டிங் (IP Rating) | IP68+IP69K ரேட்டிங் | IP65 ரேட்டிங் | IP68+IP69 ரேட்டிங் |
| விலை (Price) | ஆரம்ப விலை - ரூ.38,999 | ஆரம்ப விலை - ரூ.39,999 | ஆரம்ப விலை - ரூ.38,999 |
Camera Specifications
கேமரா அம்சங்கள்: (Camera Specifications) கேமரா செட்டப்பில் நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் சிறந்த பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் சோனி கேமரா, 50 எம்பி சாம்சங் டெலிபோட்டோ மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மோட்டோரோலாவில் 50 எம்பி சோனி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலில் 50 எம்பி சோனி கேமரா (Sony LYT-600) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ (Selfie camera) எடுப்பதில் மோட்டோரோலா 50 எம்பி கேமராவுடன் மாஸ் காட்டுகிறது.
Massive Battery and Fast Charging
பெரிய பேட்டரி மற்றும் சார்ஜிங்: (Massive Battery and Charging) ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடல் 9000mAh பேட்டரியை (Massive battery) கொண்டுள்ளது. பெரிய பேட்டரியாக இருப்பதால், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse charging) வசதியுடன் போட்டியாளர்களை மிரட்டி விட்டாப்ல! (Edge 70 Pro) மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ 6500mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் கொண்டுள்ளது. நத்திங் போனில் 5400mAh பேட்டரி கிடைக்கிறது.
Final Verdict: Which Phone Should You Buy?
எந்த மாடல் சிறந்தது: (Best Phone to Buy) மொத்தத்தில், வித்தியாசமான டிசைன் மற்றும் சிறந்த டெலிபோட்டோ கேமரா எதிர்பார்ப்பவர்களுக்கு நத்திங் போன் 4ஏ ப்ரோ மாடல் ஒரு அட்டகாசமான சாய்ஸ். சிறந்த செல்பீ கேமரா மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வேண்டுமானால் (Edge 70 Pro) மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ மாடலைத் தேர்வு செய்யலாம்.
ஆனால், கேமிங் பிரியர்களுக்கான சிறந்த பெர்ஃபார்மன்ஸ், 165Hz டிஸ்பிளே, 9000mAh பிரம்மாண்ட பேட்டரி மற்றும் நீண்ட கால ஓஎஸ் அப்டேட்கள் கொண்ட ஒரு ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், ரூ.38,999 விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6 features) ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம்.
🌐 மேலும் தகவல் மற்றும் செய்திக்கு ஆதாரம்: 👉 Gizbot செய்தியைப் பார்வையிடவும்

