Redmi K90 Max கூலிங் ஃபேன் மற்றும் 8500mAh பேட்டரி விபரம்!: கேமிங் ஸ்மார்ட்போன் உலகில் அடுத்த புரட்சியை ஏற்படுத்த, ஷாவ்மீயின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய அசுரனான ரெட்மி கே90 மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் ஸ்பேஸ் சில்வர் நிற டிசைன் மற்றும் வெப்பம் வெளியேற பிரத்யேக துளைகள் கொண்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வெறித்தனமாக ட்ரெண்டாகி வருகிறது. கேமர்களை அதிரவைக்கும் இதன் மாஸான விபரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Redmi K90 Max Specifications
முழுமையான சிறப்பம்சங்கள்: வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு அதிநவீன கேமிங் தொழில்நுட்பங்களை (Advanced gaming technologies) ஒன்றாகச் சேர்த்த ஒரு மிரட்டலான பேக்கேஜ் இது. எந்த கேமிங் டிவைஸ் வாங்கலாம் என குழப்பத்தில் இருப்பவர்களுக்காக, இந்த சாதனத்தின் துல்லியமான விபரங்கள் இதோ.
Redmi K90 Max Cooling Fan
கூலிங் தொழில்நுட்பம்: நீண்ட நேரம் கேம் விளையாடும்போது போன் சூடாவதைத் தடுக்க, இதில் 18மிமீ அளவிலான பெரிய உள்ளமைக்கப்பட்ட விசிறி (Bilt-in cooling fan) பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மதர்போர்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக காற்றோட்ட துளைகள் (Airflow vents) மூலம் போனின் வெப்பம் மிக வேகமாக வெளியேறும் வகையில் இந்த அட்டகாசமான குளிரூட்டும் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🔥 மிஸ் பண்ணிடாதீங்க: 👉 சார்ஜ் சீக்கிரம் காலி ஆகுதா? அப்போ 9020mAh முரட்டு பேட்டரியோட ஏப்ரல் 15-ல் களமிறங்கும் vivo T5 Pro 5G பத்தி கண்டிப்பா படிங்க!
Redmi K90 Max Display
டிஸ்பிளே மற்றும் டிசைன்: மிகச்சிறந்த கேமிங் அனுபவத்திற்காக, இதில் 6.83 இன்ச் அளவிலான 1.5K ரெசல்யூஷன் கொண்ட அதிவேக 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்பிளே (165Hz OLED display) வழங்கப்பட்டுள்ளது. அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப்பட்ட தட்டையான பிரேம் (Flat metal frame) இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒரு பிரீமியமான தோற்றத்தை அளிக்கிறது.
Redmi K90 Max Processor
ப்ராசஸர் வேகம்: இந்த மொபைலின் பெர்ஃபார்மன்ஸை வேற லெவலுக்குக் கொண்டு செல்ல, இதில் முரட்டுத்தனமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (Dimensity 9500 SoC) பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு கடினமான கேம்களை விளையாடினாலும் எவ்வித லேக் இல்லாமல் தடையற்ற கேமிங் (Seamless gaming performance) அனுபவத்தை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
Redmi K90 Max Battery Life
ராட்சத பேட்டரி: தடையற்ற பயன்பாட்டிற்காக, இதுவரை எந்த ரெட்மி போன்களிலும் இல்லாத 8500எம்ஏஎச் ராட்சத பேட்டரி (8500mAh massive battery) இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை அதிவேகமாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும், தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி69 ரேட்டிங் (IP69 rating) இதில் நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளது.
😲 உங்களுக்குத் தெரியுமா? 👉 இனி கம்மி விலையில் ரீசார்ஜ் பண்ணலாம்! டேட்டா இல்லாத மாஸ் திட்டங்களுக்கு TRAI கொடுத்த அதிரடி உத்தரவு பத்தி தெரிஞ்சுக்காம ரீசார்ஜ் பண்ணாதீங்க!
POCO F8 Pro India Launch Date
வெளியீட்டு தேதி: ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த மாஸான ஸ்மார்ட்போன், இந்திய மற்றும் உலகளாவிய சந்தையில் போக்கோ எப்8 ப்ரோ மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா (POCO F8 Pro India launch) என்ற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டு வெளியாகும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.


