Vivo X300 FE Specs & கேமரா சென்சார் லீக்: முழு விபரம்!

ஒன்பிளஸை கதிகலங்க வைக்க வரும் புதிய Vivo X300 FE 6500mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் ப்ராசஸருடன் வெளியாகும் Vivo X300 FE மாஸ் விபரம்.
Sabari

Vivo X300 FE Specs & கேமரா சென்சார் லீக்: முழு விபரம்!, vivo x300 fe full specifications camera battery display processor and india launch date details in tamil

Vivo X300 FE 5G :
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு செக் வைக்கும் வகையில், விவோ நிறுவனம் தனது புதிய பிரம்மாண்டமான ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது கிரீன், மூன்லைட் ஒயிட், கூல் பர்பிள் மற்றும் கிராஃபைட் பிளாக் ஆகிய அட்டகாசமான நிறங்களில் மார்க்கெட்டை அதிரவைக்க வரவுள்ளது.

கடந்த மார்ச் 5-ம் தேதி ரஷ்யாவில் அறிமுகமாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மொபைல், இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் மே மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மொபைல் வாங்கலாம் என்று யோசிப்பவர்களுக்காக, இதன் முழுமையான மற்றும் துல்லியமான சிறப்பம்சங்கள் (Full Specifications) கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Vivo X300 FE Display Specifications

டிஸ்பிளே சிறப்பம்சங்கள்: மிகச் சிறந்த திரை அனுபவத்திற்காக, இதில் 6.31-இன்ச் அளவிலான எல்டிபிஒ அமோலெட் டிஸ்பிளே (LTPO AMOLED display) வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,216×2,640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் வெயிலிலும் தெளிவாகத் தெரியும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 கேமிங் மார்க்கெட் காலி! மிரட்டலான டிசைனில் மாஸ் காட்டும் Infinix GT 50 Pro லீக்!

vivo x300 fe full specifications camera battery display processor and india launch date details in tamil

Vivo X300 FE Processor & Performance

ப்ராசஸர் ஸ்பெக்ஸ்: இந்த மொபைலின் பெர்ஃபார்மன்ஸை வேற லெவலுக்குக் கொண்டு செல்ல, இதில் 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (3nm octa-core Snapdragon 8 Gen 5 chip) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஜிஎம்ஐ போன்ற ஹெவி கேமிங் ஆப்களை எவ்வித தடங்கலுமின்றி மிக ஸ்மூத்தாகப் பயன்படுத்த முடியும்.

Vivo X300 FE Camera Specifications

ரியர் கேமரா சிறப்பம்சங்கள்: புகைப்படங்களைப் பொறுத்தவரை விவோ எப்போதும் மாஸ் காட்டும். அதன்படி, இதன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என அதிநவீன ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு (Triple rear camera) உள்ளது. இதன் மூலம் மிகத் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

Vivo X300 FE Selfie Camera

செல்ஃபி கேமரா ஸ்பெக்ஸ்: பின்பக்க கேமரா மட்டுமின்றி, முன்பக்கத்திலும் இது வாடிக்கையாளர்களை வெச்சி செஞ்சுள்ளது. ஆமாம், வீடியோ கால்கள் மற்றும் செல்ஃபிகளுக்காகவே பிரத்யேகமாக 50எம்பி முன்பக்க கேமராவும் (50MP selfie camera) இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. வ்லாக் (Vlog) எடுப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 வாட்ஸ்அப்பில் யாருக்கும் தெரியாம இன்டர்நெட் யூஸ் பண்ணணுமா? இதோ மாஸ் ட்ரிக்!

vivo x300 fe full specifications camera battery display processor and india launch date details in tamil

Vivo X300 FE Battery & Charging

பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்பெக்ஸ்: தடையற்ற நீண்ட நேர பயன்பாட்டிற்காக இதில் 6500எம்ஏஎச் அளவிலான ராட்சத பேட்டரி (6500mAh battery) பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரம்மாண்டமான பேட்டரியை மிக வேகமாக சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் (40W fast charging) வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vivo X300 FE OS & Connectivity

இயங்குதளம் மற்றும் கனெக்டிவிட்டி: இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது. மேலும், இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், IP68 + IP69 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், வைஃபை 7, புளூடூத் 6.0, மற்றும் இன்பிராரெட் சென்சார் போன்ற அனைத்து டாப்-எண்ட் சிறப்பம்சங்களையும் (Top-end specifications) விவோ நிறுவனம் இதில் வழங்கியுள்ளது.


ஆதாரம் (Source): fonearena

கருத்துரையிடுக