10,200mAh பேட்டரியுடன் அறிமுகமானது Vivo Y600 Pro!

10200mAh முரட்டு பேட்டரி, 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியுள்ள Vivo Y600 Pro ஸ்மார்ட்போனின் விலை

vivo y600 pro launch date price specifications 10200mah massive battery 50mp camera details in tamil, 10,200mAh பேட்டரியுடன் அறிமுகமானது Vivo Y600 Pro!

Vivo Y600 Pro: ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே கேமராவில் மாஸ் காட்டும் விவோ (Vivo) நிறுவனம், இப்போது பேட்டரி செக்மெண்டில் மற்ற நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க! ஸ்மார்ட்போன் பேட்டரி என்றாலே அதிகபட்சம் 5000mAh தான் என்ற வழக்கத்தை உடைத்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக புதிய 'விவோ ஒய்600 ப்ரோ' (Vivo Y600 Pro) மாடலை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் மிரட்டலான சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Vivo Y600 Pro Display Specs

அமோலெட் டிஸ்பிளே விபரங்கள்: (AMOLED display specs) கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக, இந்த ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அளவிலான 1.5K அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) கொடுக்கப்பட்டுள்ளது. இது 1260 x 2800 பிக்சல் ரெசொலூஷனை கொண்டுள்ளது. மேலும், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவத்தை மெருகேற்ற 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 300Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர்கள் (1.07 billion colours) என ஒரு பிரீமியம் திரையை விவோ வழங்கியுள்ளது.

Processor and Memory Details

ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்: (Processor and Memory) பெர்ஃபார்மன்ஸைப் பொறுத்தவரை, இந்த மாடலில் லேட்டஸ்ட் 6nm ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7300e (MediaTek Dimensity 7300e chipset) ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிளாக் ஸ்பீடு 2.5GHz ஆக உள்ளது. மேலும் கிராபிக்ஸிற்காக ARM Mali-G610 GPU கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 12GB LPDDR5 ரேம் (12GB RAM) மற்றும் 512GB UFS 3.1 இன்பில்ட் ஸ்டோரேஜ் சப்போர்ட்டுடன் சக்கைப்போடு போடுகிறது.

மேலும் படிக்க: 👉 அடேங்கப்பா.. கரண்ட் பில் பாதியா குறையுமா? Crompton BLDC ஃபேன் ரிமோட்டை செட் பண்றது இவ்வளவு ஈஸியா?

vivo y600 pro launch date price specifications 10200mah massive battery 50mp camera details in tamil

Camera Performance

கேமரா அம்சங்கள்: (Camera Performance) கேமரா செக்மெண்டிலும் இந்த போன் மாஸ் காட்டுகிறது. இதன் பின்பக்க மாட்யூலில் f/1.8 அபெர்ச்சர் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா (50-megapixel primary camera) இடம்பெற்றுள்ளது. இது 10x டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் கொண்டது. செல்பி மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக முன்பக்கத்தில் f/2.45 அபெர்ச்சர் கொண்ட அட்டகாசமான 32 எம்பி செல்பி கேமரா (32-megapixel selfie camera) உள்ளது. இதில் 1080p தரத்தில் மாஸான வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய முடியும்.

Massive 10200mAh Battery & Design

முரட்டு பேட்டரி மற்றும் டிசைன்: (Massive 10200mAh Battery) இந்த போனின் மிகப்பெரிய ஹைலைட்டே இதன் பேட்டரி தான். வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமான 10,200mAh பேட்டரியை (10,200mAh battery) விவோ பேக் செய்துள்ளது. இதை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (90W fast charging) வசதியும் உள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும் இதன் எடை வெறும் 221 கிராம் மட்டுமே! மேலும், தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க IP68 மற்றும் IP69 ரேட்டிங் (IP68 + IP69 ratings) பெற்றுள்ளது.

Connectivity and Price Details

கனெக்டிவிட்டி மற்றும் விலை: (Connectivity and Price) இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) சார்ந்த OriginOS 6-ல் இயங்குகிறது. 5G நெட்வொர்க், Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) என அத்தனை அம்சங்களும் உள்ளன. இதன் 8GB+128GB பேஸ் மாடல் விலை தோராயமாக ரூ.29,000 (Priced around Rs. 29,000) எனத் தொடங்குகிறது. டாப் எண்ட் மாடலான 12GB+512GB வேரியண்ட் விலை ரூ.40,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரைட் மூன் பிளாக், ஃப்ளோட்டிங் கோல்ட், ஸ்டார் வயலட் மற்றும் வாஸ்ட் ப்ளூ ஆகிய 4 கலர்களில் (Colour options) மே 5 முதல் இது விற்பனைக்கு வருகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக