Google I/O 2026! தானாகவே வேலை செய்யும் 'Gemini Spark' ஏஐ ஏஜென்ட் லீக்!: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (Artificial intelligence) உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் கூகுள் நிறுவனம், அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. மே 19 அன்று தொடங்கவுள்ள கூகுள் ஐ/ஓ 2026 (Google I/O 2026) நிகழ்வில், 'ஜெமினி ஸ்பார்க்' (Gemini Spark) என்ற புதிய ஏஐ ஏஜென்ட்டை கூகுள் அறிமுகம் செய்யப்போவதாக இணையத்தில் அதிர்ஷ்டவசமாக சில முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன (Features leak).
ப்ராம்ப்ட் தேவையில்லை.. பின்னணியில் இயங்கும் ஏஜென்ட்!
இப்போது வரை நாம் பயன்படுத்தும் சாட்பாட்கள் (AI chatbots) நாம் கொடுக்கும் கட்டளைகளுக்கு (Prompts) மட்டுமே பதிலளிக்கும். ஆனால், இந்த புதிய ஜெமினி ஸ்பார்க் முற்றிலும் மாறுபட்டது. இது உங்களிடம் இருந்து எந்தவொரு ப்ராம்ப்ட்டும் வராமல், பின்னணியில் 24 மணி நேரமும் உங்களுக்காகத் தானாகவே வேலை செய்யும் ஒரு அதிநவீன ஏஐ ஏஜென்ட் (Autonomous AI agent) ஆகும். உங்கள் மொபைல் மற்றும் கணினியில் உள்ள முக்கியமான வேலைகளை இதுவே கவனித்துக் கொள்ளும்.
இதையும் படியுங்கள்: 👉 New Aadhaar App டவுன்லோட் செய்ய UIDAI உத்தரவு! பழைய mAadhaar ஆப் விரைவில் மூடல்! முழு வழிகாட்டி உள்ளே!
என்னென்ன செய்யும் இந்த ஜெமினி ஸ்பார்க்?
Gemini Spark 👀 pic.twitter.com/2kuFoHXEol
— Fandu (@mrfanduuuuu) May 14, 2026
எக்ஸ் (X) தளத்தில் கசிந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுகளின்படி, இந்த ஏஐ ஏஜென்ட் உங்கள் அனுமதியோடு இணைக்கப்பட்ட ஆப்ஸ் (Connected Apps), மெயில்கள், கேலெண்டர், லொகேஷன் மற்றும் நீங்கள் லாக்-இன் செய்துள்ள இணையதளங்கள் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.
உங்கள் ஜிமெயில் இன்ப்பாக்ஸை சுத்தப்படுத்துவது (Gmail declutter).
- முக்கியமான மீட்டிங்குகளுக்கு முன்பாக அதன் சுருக்கத்தை உங்களுக்குத் தயார் செய்து தருவது.
- உங்களுக்குப் பிடித்த செய்திகளைத் தொகுத்து தினசரி செய்தித் தொகுப்பாக வழங்குவது.
- தொடர்ச்சியான வேலைகளுக்கு எனத் தனியாக 'திறன்களை' (Custom skills) உருவாக்கி, வாராந்திர ரிப்போர்ட்டுகளை கூகுள் டாக்ஸ் மற்றும் டிரைவ் மூலம் தானாகவே உருவாக்குவது.
இதையும் படியுங்கள்: 👉 New Gmail Accounts வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! கூகுள் கொண்டு வரும் புதிய அதிரடி கட்டுப்பாடு!
'செட் பண்ணிட்டா போதும்'.. ஆபத்துகளும் உண்டு!
இதன் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், மனிதர்களின் மேற்பார்வை இல்லாமல் "Set it and forget it" முறையில் இயங்கும் அளவுக்கு இதற்கு அதிகாரம் வழங்க முடியும். அதாவது, உங்களுக்காகப் பயண டிக்கெட்டுகளை புக் செய்வது, ஆன்லைன் படிவங்களை நிரப்புவது போன்ற வேலைகளை இதுவே முடித்துவிடும்.
இருப்பினும், இதில் சில பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சிக்கல்களும் (Privacy and security risks) இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஏஜென்ட் சில சமயங்களில் உங்களிடம் உறுதிப்படுத்தல் கேட்காமலேயே ஆன்லைன் பர்ச்சேஸ் செய்யவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்குத் தகவல்களைப் பகிரவோ வாய்ப்புள்ளது. இதனால், பயனர்கள் தங்களின் பிரவுசர் தரவுகளையும், இணைக்கப்பட்ட ஆப்ஸ்களையும் எப்போது வேண்டுமானாலும் செட்டிங்ஸ் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கவுள்ளது.
ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உலகையே மாற்றியமைக்கப் போகும் இந்த ஜெமினி ஸ்பார்க் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்பதால், ஒட்டுமொத்த டெக் உலகமும் இந்த நிகழ்வை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.