SBI profile password மறந்துடுச்சா? 1 நிமிஷத்துல மாத்துங்க!

reset sbi profile password மறந்துவிட்டால், ரகசியக் கேள்வி அல்லது ஏடிஎம் கார்டு மூலம் ஆன்லைனில் ரீசெட் செய்யும் முறைகள் இதோ!

SBI profile password மறந்துடுச்சா? 1 நிமிஷத்துல மாத்துங்க!,, How to reset SBI net banking profile password in Tamil, forgot profile password reset using hint question or ATM card, SBI online banking safety tips 2026,

எஸ்பிஐ (Sbi Bank) வங்கியில் நெட் பேங்கிங் (sbi net banking personal )பயன்படுத்துபவர்கள், பணத்தை டிரான்ஸ்பர் செய்யவோ அல்லது புதிய சேவைகளை ஆக்டிவேட் செய்யவோ புரொபைல் பாஸ்வேர்ட் (Profile Password) மிக அவசியமான ஒன்றாகும். பல நேரங்களில் நாம் லாகின் பாஸ்வேர்டை நினைவில் வைத்திருப்போம், ஆனால் இந்த புரொபைல் பாஸ்வேர்டை மறந்துவிடுவதுண்டு.

How to Reset Sbi Profile Password Online

அப்படி ஒரு சூழ்நிலையில், வங்கிக்குச் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் உங்கள் எஸ்பிஐ புரொபைல் பாஸ்வேர்டை ரீசெட் (Reset SBI Profile Password) செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான ஸ்டெப் பை ஸ்டெப் தகவல்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

SBI Net Banking Login Process

எஸ்பிஐ லாகின் நடைமுறை: முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான go to 'onlinesbi.sbi' என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே உங்களது யூசர் நேம் (Username) மற்றும் லாகின் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாகின் செய்யவும்.

இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை உள்ளிட்ட பிறகு, மெயின் மெனுவில் உள்ள 'Profile' அல்லது 'Personal Profile' என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே 'Forgot Profile Password' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதையும் படியுங்கள்: 👉 ஆதார் கார்டு புதிய எச்சரிக்கை! வாழ்நாளில் 1 முறை மட்டுமே மாற்றம்!

How to reset SBI net banking profile password in Tamil, forgot profile password reset using hint question or ATM card, SBI online banking safety tips 2026,

Reset Using Hint Question

ரகசியக் கேள்வி மூலம் மாற்றுதல்: உங்கள் புரொபைல் பாஸ்வேர்டை ரீசெட் செய்ய எளிதான வழி 'Hint Question' முறையாகும். நீங்கள் முதன்முதலில் புரொபைல் பாஸ்வேர்டு உருவாக்கியபோது ஒரு ரகசியக் கேள்வியையும் (Secret Hint Question), அதற்கான பதிலையும் கொடுத்திருப்பீர்கள்.

உங்களுக்கு அந்தப் பதில் நினைவிருந்தால், அதைச் சரியாக உள்ளீடு செய்வதன் மூலம் உடனடியாகப் புதிய புரொபைல் பாஸ்வேர்டை (set new profile password) உருவாக்கிக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான வழிமுறையாகும்.

Resetting via ATM Cum Debit Card

ஏடிஎம் கார்டு மூலம் ரீசெட் செய்தல்: உங்களுக்கு ரகசியக் கேள்வி நினைவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. 'Approval through ATM cum Debit Card' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் டெபிட் கார்டு விபரங்களைச் சரிபார்ப்பதன் மூலம் பாஸ்வேர்டை மாற்ற உதவும்.

இங்கே உங்கள் ஏடிஎம் கார்டு எண் மற்றும் பின் (ATM PIN) விபரங்களை உள்ளிட்ட பிறகு, சிஸ்டம் உங்களைச் சரிபார்க்கும் (validate card details). சரிபார்ப்பு முடிந்தவுடன், திரையில் புதிய புரொபைல் பாஸ்வேர்டை உள்ளிடுவதற்கான பக்கம் தோன்றும்.

Approval via Bank Branch

வங்கி கிளை மூலம் அனுமதி பெறுதல்: மேலே சொன்ன இரண்டு முறைகளும் உங்களுக்குச் சாத்தியமில்லை என்றால், 'Approval through Branch' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைத் தேர்வு செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்ணப்பப் படிவம் (registration form) ஆன்லைனில் தோன்றும்.

அந்தப் படிவத்தைப் பிரிண்ட் எடுத்து, உங்கள் எஸ்பிஐ வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் உங்கள் விபரங்களைச் சரிபார்த்துவிட்டு, உங்கள் புரொபைல் பாஸ்வேர்டை ரீசெட் செய்ய அனுமதி வழங்குவார்கள்.

கருத்துரையிடுக