Realme 16x BIS Certification: ஒரு போன் வாங்கினா அதுல என்ன எதிர்பார்ப்பீங்க? "சார்ஜ் போட்டா ரெண்டு நாளைக்கு நிக்கணும், வீடியோ பார்த்தா தியேட்டர் மாதிரி இருக்கணும், கேம் விளையாடினா லேக் ஆகக்கூடாது." இதையெல்லாம் ஒரே போன்ல, அதுவும் உங்க பட்ஜெட்டுக்குள்ள கொண்டு வரப்போகுது ரியல்மி!
ரியல்மி 16 சீரிஸில் ஏற்கனவே ப்ரோ மாடல்கள் கலக்கிக்கொண்டிருக்க, இப்போது "பெர்ஃபார்மன்ஸ் ஹீரோ" என்று அழைக்கப்படும் ரியல்மி 16எக்ஸ் (Realme 16x) இந்தியச் சந்தைக்கு வரத் தயாராகிவிட்டது. பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்றுள்ள இந்த போன், ஏன் இப்போதே இவ்வளவு ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பதற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக இங்கே பார்ப்போம்!
Realme 16x BIS Certification
பிஐஎஸ் சான்றிதழ்: இந்திய தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ் (Bureau of Indian Standards) தளத்தில் 'RMX5270' என்ற மாடல் எண்ணுடன் ரியல்மி 16எக்ஸ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஸ்மார்ட்போன் மிக விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகமாகப் போவதை உறுதிப்படுத்துகிறது. பொதுவாக ஒரு போன் பிஐஎஸ் சான்றிதழ் பெற்றால், அடுத்த சில வாரங்களிலேயே அதன் விற்பனை தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Realme 16x Price in India
ரியல்மி 16எக்ஸ் விலை: இந்தியச் சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவை குறிவைத்து களமிறங்கும் ரியல்மி 16எக்ஸ் விலை சுமார் ரூ.16,999 முதல் ரூ.18,999-க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான ரியல்மி 15எக்ஸ் மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகிறது.
இதையும் படியுங்கள்: OnePlus 16 லீக்ஸ்! 200MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரி!
Realme 16x Specifications
ரியல்மி 16எக்ஸ் ஸ்பெசிபிகேஷன்: இந்த போனின் சிறப்பம்சங்கள் உங்களை வியக்க வைக்கும். இதில் 6.84-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்பிளே (6.84-inch FHD+ LCD Display) உள்ளது. இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) ஆதரவுடன் வருவதால், கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (MediaTek Dimensity 6400 SoC) பொருத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
Realme 16x Battery and Charger
ரியல்மி 16எக்ஸ் பேட்டரி: "சார்ஜ் தீர்ந்துவிடுமோ" என்ற கவலையே இனி வேண்டாம்! இந்த போனில் பிரம்மாண்டமான 7,550mAh பேட்டரி (7,550mAh Battery) வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 60W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (60W SUPERVOOC Fast Charging) வசதி கொடுக்கப்படலாம். இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட போனை வாங்கத் திட்டமிடுபவர்கள், சரியான நிதி மேலாண்மைக்கு எங்களது 5 மோசமான முதலீடுகள் பதிவையும் ஒருமுறை வாசிக்கலாம்.
இதையும் படியுங்கள்: Redmi-யின் அடுத்த அதிரடி டீசர் - முழு விவரம்! அமேசானில்
Realme 16x Camera Features
ரியல்மி 16எக்ஸ் கேமரா: கேமரா பிரியர்களுக்காக இதில் 50MP முதன்மை கேமரா (50MP Primary Camera) மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்காக முன்பக்கம் 32MP கேமரா (32MP Selfie Camera) வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமரா திறனை ஏற்கனவே சந்தையில் உள்ள ஒப்போ ரேனோ 16 ப்ரோ மாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது பட்ஜெட் விலையில் ஒரு அசத்தலான தேர்வாகும்.
Realme 16x Storage and RAM
ரியல்மி 16எக்ஸ் ஸ்டோரேஜ்: இந்த போன் 4GB, 6GB மற்றும் 8GB ரேம் (RAM) வசதியுடன், 128GB அல்லது 256GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாக உள்ளது. மேலும், இது ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான ரியல்மி யூஐ (Realme UI) மென்பொருளில் இயங்கும். என்டியூரன்ஸ் பிரவுன் (Endurance Brown) மற்றும் க்ளோரி ஒயிட் (Glory White) ஆகிய நிறங்களில் இது கிடைக்கும்.
