Motorola G86 Power 5G: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart Offer) தளத்தில், சக்திவாய்ந்த மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola G86 Power 5G) மொபைல் தற்பொழுது மிகப்பெரிய சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
அதிவேக சார்ஜிங் வசதி, சோனி நிறுவனத்தின் பிரீமியம் கேமரா மற்றும் பிரம்மாண்டமான 6720எம்ஏஎச் பேட்டரி பேக்கப் கொண்ட இந்த மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் முழுமையான விபரங்களை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
Motorola g86 Power 5G specifications
மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி அம்சங்கள்: காட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் தரும் இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் அளவில் சிறந்த ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே அமைப்பைக் கொண்டுள்ளது.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் வரும் இந்த திரையில் அதிவேக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500 nits Peak Brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு (Corning Gorilla Glass 7i Protection) போன்ற உயர்தர வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் உள்ளே அசாத்திய வேகம் கொண்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் பணிகளுக்கு ஏற்ற சிறந்த பிராசஸர் செயல்திறனை (Processor Performance) இது வழங்கும்.
இதுவும் படியுங்கள்: ஆகஸ்ட் 12-ல் புது Google Pixel 11 Pro போனை அறிமுகம் செய்யும் கூகுள்!
இதனுடன் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு, தெளிவான ஒலிக்கான டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பமும் இதில் உள்ளது. இந்த போன் பான்டோன் காஸ்மிக் ஸ்கை உள்ளிட்ட மூன்று அசத்தலான நிறங்களில் கிடைக்கிறது.
பாதுகாப்பான பயன்பாட்டிற்கு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் மிக உயர்தர இராணுவ சான்றிதழான MIL-STD-810H வசதியும் உள்ளது. மேலும் மொபைல் தூசு மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாமல் இருக்க IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை அள்ளும் வகையில் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவும், பின்பக்கத்தில் 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் அடங்கிய மாஸ் ட்ரிபிள் கேமரா செட்டப் (Triple Camera Setup) வசதியும் உள்ளது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.
இதுவும் படியுங்கள்: iQOO Z11 Lite: 6500mAh பேட்டரியுடன் புது 5ஜி போன்!
Motorola G86 Power 5G Price
மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி விலை விபரங்கள்: பிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் பக்கத்தில் 8ஜிபி ரேம் (8GB RAM) மற்றும் 128ஜிபி மெமரி (128GB Storage) கொண்ட இந்த மாடலுக்கு தற்பொழுது 10 சதவீதம் வரை நேரடி தள்ளுபடி (10 Percent Price Discount) வழங்கப்பட்டுள்ளது.
இந்த அசத்தல் சலுகையின் மூலம் வெறும் ரூ.17,999 (Rs 17,999) விலையில் இந்த மாடலை தற்பொழுது சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் ரூ.18,000-க்கு கீழ் (under Rs 17,999) சந்தையில் கிடைக்கும் ஒரு சிறந்த 5ஜி ஆல்-ரவுண்டர் மொபைலாக இது மாறுகிறது.
இதுமட்டுமின்றி, கூடுதலாக ஆக்ஸிஸ் அல்லது எஸ்பிஐ கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு உடனடி கிரெடிட் கார்டு தள்ளுபடி (Credit Card Discount Offer) ஆபர்களும் காத்திருக்கின்றன.
நீண்ட நேரம் உழைக்கும் 6720mAh பேட்டரி (Battery Backup) மற்றும் 33W அதிவேக சார்ஜிங் (33W Fast Charging) கொண்ட இந்த மாடலில், அடுத்த தலைமுறை 5ஜி (5G Network) மற்றும் புளூடூத் 5.4 உள்ளிட்ட அனைத்து கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளன. கம்மி பட்ஜெட்டில் வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று நினைப்பவர்களுக்கு ரூ.18,000-க்கு கீழ் (Under Rs 18,000) கிடைக்கும் இந்த 5ஜி போன் ஒரு பக்காவான சாய்ஸ்.

