RBI Loan Mobile Rules: பேங்க் அக்கவுண்ட் வழியாகவோ அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ மாதாந்திர தவணை செலுத்தும் ஒட்டுமொத்த நுகர்வோர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய ஆர்பிஐ லோன் மொபைல் விதிகள் (RBI Loan Mobile Rules) நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர இருக்கின்றன.
ரூ.10,000 கடனோ அல்லது ரூ.25,000 கடனோ எதுவாக இருந்தாலும், தவணை கட்டாமல் விட்டால் இந்த புதிய நெறிமுறைகள் நேரடியாகப் பொருந்தும்.
குறிப்பாக, ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த புதிய விதிகள் ஒட்டுமொத்த பொதுத்துறை மற்றும் தனியார் பேங்குகள், மற்றும் தவணை முறைகளை வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் (Financial institutions) பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவும் படியுங்கள்: 9000mAh ராட்சத பேட்டரி.! 200MP கேமராவுடன் வெளியாகும் புது Redmi Note 17 Pro போன்!
RBI Loan Mobile Rules For Smartphone EMI
ஸ்மார்ட்போன் இஎம்ஐ புதிய விதிகள்: மாதாந்திர தவணை முறையில் மொபைல் போன் வாங்குபவர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் எவ்வாறு பொருந்தும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
- ஸ்மார்ட்போனை முழு தொகையையும் கொடுத்து வாங்காமல், மாதாந்திர தவணையை (Monthly EMI) செலுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் நேரடியாகப் பொருந்தும்.
- எனவே, எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), ஐஓபி (IOB) போன்ற எந்தவொரு முன்னணி பேங்குகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
- ஆர்பிஐ அனுமதி பெற்ற பிற நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் லோன் ஆப்களுக்கும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
- மேலும், ஆக்சிஸ் பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு (Axis Flipkart Credit Card) போன்ற போன்களுக்கு மாதாந்திர தவணை முறையை வழங்கும் கார்டுகளுக்கும் இது பொருந்தும்.
இதேபோன்ற முறைகளில் மாதாந்திர தவணை முறையில் ஸ்மார்ட்போனை வாங்கிவிட்டு, தவணை செலுத்தாமல் விட்டால், அந்த ஸ்மார்ட்போனை லாக் (Lock) செய்யும் அதிகாரத்தை லோன் கொடுத்த நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிகள் வழங்குகின்றன.
இதுவும் படியுங்கள்: மிலிட்டரி தரம்.! இரண்டு புதிய 5ஜி போன்களை லான்ச் செய்யும் Itel நிறுவனம்!
Smartphone Lock Regulations
ஸ்மார்ட்போன் லாக் செய்வதற்கான கட்டுப்பாடுகள்: வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை லாக் செய்வதற்கு முன்பாக நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அட்வான்ஸ்டு கட்டுப்பாடுகள் இதோ:
- மாதாந்திர தவணையைச் செலுத்தாமல் இருந்தால் உடனே ஸ்மார்ட்போனை பேங்குகள் லாக் செய்ய முடியாது.
- அதன்படி, தவணை செலுத்தாமல் இருந்து தொடர்ந்து 90 நாட்கள் கழித்த பிறகே ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அனுமதியை நிறுவனங்கள் பெறுகின்றன.
- இந்த 90 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட்போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் (Notice) வழியாக முன்கூட்டியே தகவல் கொடுக்கப்படும்.
- குறிப்பாக, மாதாந்திர தவணை கட்டத் தவறிய 60 நாட்களுக்குப் பிறகு முதல் நோட்டீஸ் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- இந்த நோட்டீஸ் பெற்ற 21 நாட்களுக்குள் மீண்டும் நிலுவைத் தவணையைச் செலுத்தினால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல லோனை (Loan) தொடரலாம்.
இதைத் தவறினால், நிறுவனங்கள் தரப்பில் இருந்து இரண்டாவது நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். இந்த நோட்டீஸ் வந்த பிறகும் 7 நாட்களுக்குள் மீண்டும் தவணையைச் செலுத்தி லாக் செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Rules On Personal Data & Penalty
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மற்றும் அபராத விபரங்கள்: மொபைல் லாக் செய்யப்படும் போது வாடிக்கையாளர்களின் தரவு பாதுகாப்பு மற்றும் இதர விதிமுறைகள் பின்வருமாறு:
- மாதாந்திர தவணையை முற்றிலும் கட்டத் தவறும்பட்சத்தில் மட்டுமே ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரம் பேங்குகளுக்குக் கிடைக்கும்.
- இருப்பினும், இந்த லாக் முறையானது போனை முழுமையாக முடக்குவது கிடையாது.
- இக்காலகட்டத்தில் மொபைலின் இன்டர்நெட் சேவை (Internet service) வழக்கம்போல வாடிக்கையாளர்களுக்குக் வழங்கப்படும்.
- அதோடு, இன்கம்மிங் கால்கள் வழக்கம்போல வரும் மற்றும் அவசரக்கால எஸ்ஓஎஸ் (SOS) சேவைகளும் தொடர்ந்து கிடைக்கும்.
- மிக முக்கியமாக, ஸ்மார்ட்போனில் இருக்கும் போட்டோக்கள், டாக்குமெண்ட்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் (Personal Data) எக்காரணம் கொண்டும் நிறுவனங்களால் எடுக்கப்படாது.
- இது தவிர ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு (Transactions) தற்காலிகத் தடை விதிக்கப்படலாம்.
இருப்பினும், நிலுவைத் தொகையை மீண்டும் செலுத்தி உடனடியாக லாக்கில் இருந்து விலக்கு பெற முடியும். அவ்வாறு செலுத்தினால், 1 மணி நேரத்திற்குள் போன் அன்லாக் (Unlock) செய்யப்பட வேண்டும்.
தாமதம் ஏற்பட்டால் 1 மணி நேரத்திற்கு ரூ.250 இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாமல் போன் லாக் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெற்றுக் கொள்ள முழு உரிமை உண்டு!

