Itel Zeno 100 Pro: டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐடெல், இந்திய மொபைல் சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவை விரிவாக்கத் தயாராகி வருகிறது.
அதன்படி, ஐடெல் ஜெனோ 100 ப்ரோ மற்றும் ஐடெல் ஜெனோ 100 லைட் (Itel Zeno 100 Lite) ஆகிய இரண்டு புதிய மாடல்களை நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக, இந்த லான்ச் நிகழ்வுக்கு முன்னதாகவே, அமேசான் தளத்தில் இதற்கான பிரத்யேக மைக்ரோசைட் பக்கங்களை உருவாக்கி, போனின் முக்கிய அம்சங்களை நிறுவனம் டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த இரண்டு மாடல்களுமே நீண்ட உழைப்பு மற்றும் கடினமான வடிவமைப்பு (Durability) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவும் படியுங்கள்: Jio Rs 999 Prepaid Plan: 98 நாள் வேலிடிட்டி & சலுகை விபரம்!
Itel Zeno 100 Pro Features
ஐடெல் ஜெனோ 100 ப்ரோ அம்சங்கள்: அமேசான் லேண்டிங் பக்கத்தின்படி, இந்திய சந்தையில் வரவிருக்கும் இந்த ப்ரோ மாடலின் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் இதோ:
- இந்த புதிய ஐடெல் ஜெனோ 100 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தியாவில் வர்ற ஜூலை 16-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் (Launch) செய்யப்பட உள்ளது.
- இப்போன் ரஃப்பான தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு "பில்ட் டஃப்" (Built tough) என்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- மேலும், இதில் கடினமான பாதுகாப்பிற்காக MIL-STD 810H இராணுவ தர சான்றிதழ் (Military-grade durability certification) வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மொபைல் அதிக வெப்பம் மற்றும் கீழே விழுந்தாலும் தாங்கக்கூடிய (Heat and drop resistance) தன்மையைக் கொண்டது.
- அதோடு, இந்த போனின் டீஸர் பக்கத்தில் "பாயிண்ட் அண்ட் டாப் கண்ட்ரோல் கனெக்டிவிட்டி" (Point and Tap Control Connectivity) அம்சம் இடம்பெற்றுள்ளது.
எனவே, இப்போனில் ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) வசதி கொடுக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் டிவி, ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை மொபைல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். மேலும் இதில் டூயல் ரியர் கேமரா (Dual rear camera) அமைப்பும் இடம் பெற்றுள்ளது.
இதுவும் படியுங்கள்: ஒத்த போனுக்கு மொத்த மார்கெட்டும் மிரளுது.! TECNO CAMON 50 Ultra 5G ஜூலை 17-ல் லான்ச்!
Itel Zeno 100 Lite Features
ஐடெல் ஜெனோ 100 லைட் அம்சங்கள்: இந்த சீரிஸின் கீழ் பட்ஜெட் விலையில் வரவிருக்கும் லைட் வேரியண்ட்டின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
- இப்போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) கொண்ட பெரிய 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வரும்.
- குறிப்பாக, இதில் சிறந்த ஒலிக்காக டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் (DTS-backed speakers) வழங்கப்பட்டுள்ளன.
- இப்போனிலும் MIL-STD இராணுவ தர சான்றிதழ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும், இதில் நீண்ட நேர பயன்பாட்டிற்காகப் பெரிய 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) பேக் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த லைட் மாடலின் லான்ச் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது "கமிங் சூன்" (Coming soon) என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த லைட் மாடலானது ஜூலை 16 அன்று ப்ரோ மாடலுடன் இணைந்தோ அல்லது அதற்கு அடுத்தடுத்த நாட்களிலோ அறிமுகம் செய்யப்படலாம்.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த புதிய ஐடெல் ஜெனோ 100 சீரிஸ் (Itel Zeno 100 series) போன்களின் அசல் விலை மற்றும் சிப்செட் விபரங்கள் லான்ச் தேதியன்று முழுமையாகத் தெரியவரும்.