TECNO CAMON 50 Ultra 5G: என்ற புதிய மாஸான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலானது, இந்திய மொபைல் சந்தையில் வர்ற ஜூலை 17-ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் (Launch) செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட மாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, இந்த போன் 7.75 எம்எம் தடிமனுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான லுக் (Look) மற்றும் சிறந்த டிசைனுடன் வெளியாக இருக்கிறது.
நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனானது (Smartphone), இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் (Amazon) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும், இதற்காக அமேசான் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் பக்கம் இப்போதே லைவாக்கப்பட்டுள்ளது. இப்போன் இந்தியாவில் சைப்ரஸ் கிரீன், மிஸ்டி பர்பிள் மற்றும் நெபுளா டைட்டானியம் ஆகிய 3 மாஸான கலர் ஆப்ஷன்களில் (Color options) கிடைக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.
இதுவும் படியுங்கள்: நாடே எதிர்பார்த்த Realme Narzo 100x 5G போன்.! 8000mAh பேட்டரியுடன் ஜூலை 15-ல் லான்ச்!
TECNO CAMON 50 Ultra 5G Specifications
டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்: இந்திய மார்க்கெட்டில் ஒரு புதிய சாதனையை படைக்க வரவிருக்கும் இந்த போனின் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் பின்வருமாறு:
- இந்த புதிய போன் ஆனது ஒரு பெரிய 6.78-இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (Curved AMOLED Display) வசதியுடன் வரும்.
- குறிப்பாக, இதன் டிஸ்பிளேவில் மிக ஸ்மூத்தான இயக்கத்திற்காக 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- செயலி ஆதரவை பொறுத்தவரை, இதில் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் (MediaTek Dimensity 7400 Ultimate) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்குச் சிறந்த வேகம் மற்றும் அட்வான்ஸ்டு பெர்பாமன்ஸ் (Performance) வழங்கும்.
- இப்போன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைஓஎஸ் 16 (HiOS 16) மென்பொருள் வசதியுடன் இயங்குகிறது.
மேலும், இதில் அட்வான்ஸ்டு டெக்னோ ஏஐ (TECNO AI) தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐ ஆர்ட் கேலரி (AI Art Gallery), ஏஐ பிளார் ரிமூவர் (AI Flare Remover) மற்றும் 3டி போட்டோஸ்பேஸ் (3D PhotoSpace) போன்ற மிரட்டலான அம்சங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்.
இதுவும் படியுங்கள்: ஜூலை 15-ல் வெளியாகும் Motorola Edge 70 Max .!
TECNO CAMON 50 Ultra 5G Price
டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5ஜி விலை: இந்த புதிய 5ஜி போனின் கேமரா மற்றும் பேட்டரி பேக்கப் விபரங்கள் பின்வருமாறு:
- இப்போனில் புகைப்படங்களுக்காக 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா (50MP Telephoto camera) செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
- அதோடு, இதில் சோனி லைடியா 700சி (Sony LYTIA 700C) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் அசத்தலான படங்களை எடுக்கலாம்.
- இந்த கேமராவுக்கு ஏஐ 100எக்ஸ் சூப்பர் ஜூம் (AI 100x SuperZoom) மற்றும் அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) சப்போர்ட்டும் கிடைக்கிறது.
- எனவே, அண்டர்வாட்டர் போட்டோகிராபி வசதிக்காக இதில் IP69K மற்றும் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) பாதுகாப்பு ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இப்போனில் ஒரு அசுரத்தனமான 6500எம்ஏஎச் பேட்டரி (6500mAh battery) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீண்ட நேர பேட்டரி பேக்கப் (Battery backup) கிடைக்கும். இதனை வேகமாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் உள்ளது.
அனைத்து பிரீமியம் அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது, இந்திய சந்தையில் ரூ.35,000-க்கு கீழ் (Under Rs 35,000) அறிமுகமாகும் என்று மொபைல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பட்ஜெட் விலையில் 6500mAh அசுர பேட்டரி மற்றும் மிரட்டலான கேமராக்களுடன் மாஸ் காட்ட நினைக்கும் பயனர்களுக்கு, இந்த புதிய டெக்னோ அறிமுகம் (TECNO CAMON 50 Ultra 5G ) போட்டி நிறுவனங்களுக்கு மரண அடி கொடுக்கும் ஒரு பக்காவான சாய்ஸ் ஆகும்!

