Jio Rs 999 Prepaid Plan: ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால், அடுத்த 98 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited voice calls) மற்றும் தினசரி டேட்டா சலுகைகளைத் தவறவிடாதீர்கள்.
இதோடு சேர்த்து, 3 மாதங்களுக்கு ஓடிடி (OTT) சந்தா மற்றும் 18 மாதங்களுக்கு ஜெமினி (Gemini) சந்தா போன்ற கூடுதல் சலுகைகளும் இந்தத் திட்டத்தில் கிடைக்கிறது. நீண்ட நாட்கள் வேலிடிட்டி மற்றும் நெட்வொர்க் சலுகை தேடுபவர்களுக்கு இந்த பிளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக, 1 மாதம், 2 மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்து சலித்துப்போன வாடிக்கையாளர்களுக்கு, இந்த 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.999 திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
Jio Rs 999 Prepaid Plan Specifications
ஜியோ ரூ.999 பிளான் அம்சங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கும் மேலான வேலிடிட்டி (Validity) கிடைக்கிறது. இதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
- இந்த 98 நாட்கள் வேலிடிட்டி முழுவதும், அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited local calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming calls) சலுகை கிடைக்கிறது.
- மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை (2GB data) பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த டேட்டா லிமிட் முடிந்த பிறகும், 64 கேபிபிஎஸ் (64kbps) வேகத்தில் தொடர்ந்து டேட்டா வசதி கிடைக்கும். இது 4ஜி (4G) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- எனவே, 98 நாட்களுக்கு மொத்தம் 196 ஜிபி டேட்டாவை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதன்பின், 5ஜி (5G) வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு டேட்டா லிமிட் கிடையாது. 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) தடையின்றிப் பயன்படுத்தலாம்.
இதுவும் படியுங்கள்: ஒத்த போனுக்கு மொத்த மார்கெட்டும் மிரளுது.! TECNO CAMON 50 Ultra 5G ஜூலை 17-ல் லான்ச்!
Jio Rs 999 Prepaid Plan Offers
ஜியோ ரூ.999 பிளான் கூடுதல் சலுகைகள்: இந்தத் திட்டம் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா மட்டுமன்றி, பல கூடுதல் சலுகைகளையும் (Offers) வழங்குகிறது:
- முதலாவதாக, ஜியோ நிறுவனத்தின் ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 3 மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.
- அதோடு, ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. இதில் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud storage) வசதி கிடைக்கும்.
- இந்த கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவைப் பயன்படுத்த, ஜியோ மொபைல் நம்பரை மட்டுமே லாகின் செய்யப் பயன்படுத்த வேண்டும்.
- மிக முக்கியமாக, 5 டிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானே பனானா (Nano Banana) அணுகலை வழங்கும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதன் மூலம் அட்வான்ஸ்டு ஏஐ அம்சங்களைப் பெற முடியும்.
இதனை பயனர்கள் 18 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இருப்பினும், 98 நாட்களுக்குப் பிறகு ரீசார்ஜ் வேலிடிட்டி முடிந்துவிடும் என்பதால், தொடர்ந்து சேவைகளைப் பெற மீண்டும் ரீசார்ஜ் செய்வது அவசியம்.
எனவே, 3 மாதங்களுக்கு மேலான வேலிடிட்டி, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் போன்ற கூடுதல் ஓடிடி சந்தா வேண்டுமானால், இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம்!
