ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் (Mobile market) தற்போதைய காலகட்டத்தில் மொபைல் பிராசஸர்கள், கேமராக்கள் மற்றும் பேட்டரி வசதிகள் ஆகியவை பிரம்மாண்டமான முறையில் வளர்ந்துவிட்டன. ஆனால், ஒரு போனின் ஒட்டுமொத்த வேகத்தை முடிவு செய்வதில் அதன் உள்ளமைக்கப்பட்ட மெமரி வேகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், ஜேஇடிஇசி (JEDEC) நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறைக்கான புதிய மெமரி தொழில்நுட்பத் தரநிலையைத் தற்போது அதிகாரப்பூர்வமாக இறுதி செய்துள்ளது. இது ஆன்லைன் டெக் வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
நெக்ஸ்ட் லெவல் வேகத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு (Users), வரும் நாட்களில் அறிமுகமாக உள்ள புதிய போன்களில் வரப்போகும் இந்த தொழில்நுட்பம் ஒரு மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இதுவும் படியுங்கள்: சாம்சங் காலி.! மிரட்டலான ஆப்பிள் iPhone 18 Pro Max லீக்!
UFS 5.0 explained
புதிய யுஎஃப்எஸ் 5.0 மெமரி விபரம்: ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் மொபைல்களில் டேட்டாவைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் ஃபிளாஷ் ஸ்டோரேஜ் (Universal Flash Storage) தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்தான் இந்த புதிய பதிப்பாகும். தற்போதைய பிரீமியம் போன்கள் பெரும்பாலும் யுஎஃப்எஸ் 4.0 அல்லது 4.1 மெமரியை நம்பி இருக்கின்றன.
புதிய விபரங்களின்படி, இந்த நெக்ஸ்ட் ஜென் தொழில்நுட்பம் விநாடிக்கு 10.8 ஜிபி (10.8GB/s transfer speeds) வரையிலான அதிவேக டேட்டா பரிமாற்றத்தை சப்போர்ட் செய்யும். இது தற்போதைய மொபைல் போன்களின் மெமரி வேகத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Smartphone Storage Speed
அதிவேக மெமரி ஏன் அவசியம்: இனிவரும் காலங்களில் ஸ்மார்ட்போன்களில் ஆன்-டிவைஸ் ஏஐ (On-device AI) அம்சங்கள், 4கே மற்றும் 8கே தரத்திலான உயர்தர வீடியோ பதிவுகள் மற்றும் ஹெவி மல்டிடாஸ்கிங் ஆகியவை மிக முக்கிய அங்கமாக மாறப்போகின்றன.
வழக்கமான கிளவுட் சர்வர்களை நம்பியிருக்காமல், போனுக்குள்ளேயே லார்ஜ் லாங்குவேஜ் மாடல்களை (Large language models) அதிவேகமாக இயக்க இந்த அதிவேக மெமரி சப்போர்ட் மிகவும் அவசியமாகும். மேலும் கேமராக்களில் ரா (RAW) இமேஜ்களைப் பதிவு செய்யும் போது எவ்வித லேகும் இன்றி ஸ்மூத்தான பெர்பாமன்ஸை இது வழங்கும்.
மெமரி வேகம் மட்டுமின்றி, சிக்னல் பாதிப்புகளைத் தவிர்க்கும் லிங்க் ஈக்வலைசேஷன் (Link Equalisation) மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இன்லைன் ஹாஷிங் (Inline Hashing) ஆகிய அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, குறைவான பேட்டரி நுகர்வு (Power efficiency) வசதியும் இதில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுவும் படியுங்கள்: மிரட்டலான பேஸ்.! பட்ஜெட் விலையில் OnePlus Nord Buds 4 Pro!
UFS 5.0 Storage Release Date
அறிமுக தேதி மற்றும் சந்தை நிலவரம்: மெமரி தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே இதற்கான மாதிரிகளை போன் தயாரிப்பாளர்களிடம் வழங்கத் தொடங்கிவிட்டன. இதன் அசல் வணிகரீதியான உற்பத்தி வரும் நாட்களில் தொடங்கி, இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட முதல் போன் வரும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
எனவே வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்னு சொல்ற மாதிரி, பட்ஜெட் விலையைத் தாண்டி அதிவேகமான ஏஐ அம்சங்கள் மற்றும் மிரட்டலான கேமிங் பெர்பாமன்ஸை எதிர்பார்க்கும் மக்களுக்கு, இந்த புதிய தொழில்நுட்பம் தற்போதைய சந்தையில் வெச்சி செஞ்சிட்டாங்கன்னு சொல்லும் அளவுக்கு ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மாஸ் சாய்ஸ் (Mass choice) ஆகும்!


