தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது. ஆனால், சினிமா மற்றும் தொடர்களைப் பார்க்க ஒவ்வொரு ஓடிடி ஆப்பிற்கும் தனித்தனியாகச் சந்தா செலுத்துவது பயனர்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கிறது. இந்தச் செலவைக் குறைத்து, ஒரே ரீசார்ஜில் அதிக பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் நோக்கில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் ஐடியா (Vi) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகியவை அட்டகாசமான ஆட்-ஆன் பிளான்களைக் களமிறக்கியுள்ளன.
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.200 பிளான் மற்றும் அதற்குப் போட்டியாக உள்ள ஜியோவின் ரூ.200, ரூ.55 திட்டங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Vi Rs 200 Plan Details
வோடபோன் ஐடியா ரூ.200 பிளான் சலுகைகள்: வோடபோன் ஐடியாவின் விஐ மூவிஸ் அண்ட் டிவி (Vi Movies & TV) தளத்தின் கீழ் இந்த புதிய ரூ.200 ப்ரீபெய்ட் என்டர்டெயின்மென்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த பேக் மூலமாகப் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 30 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவை இருக்கும் பகுதிகளில் வாழும் தகுதியான பயனர்களுக்கு வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இதில் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சலுகைகள்தான். இதில் ஜியோஹோட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5), சோனிலைவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சாவ்பால் (Chaupal), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), கிளிக் (Klikk), ஃபேன்ஃகோட் (FanCode) மற்றும் ஷீமாரூமீ உட்பட 20 முன்னணி ஓடிடி ஆப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனுடன் 200க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் (Live TV Channels) நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கலாம்.
மேலும், ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் (Devices) இந்த கணக்கை இணைத்து, 2 திரைகளில் (Screens) வீடியோக்களை ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பெற வாடிக்கையாளர்களின் சிம் கார்டில் ஏதேனும் ஒரு முதன்மை ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.
இதுவும் படியுங்கள்: 56 நாட்களுக்கு கவலையே இல்லை! JIO-வின் இந்த 2 பிளானில் எது பெஸ்ட் தெரியுமா?
Jio Rs 200 Plan Benefits
ஜியோ ரூ.200 பிளான் சலுகைகள்: வோடபோன் ஐடியாவிற்குப் போட்டியாக ஜியோ நிறுவனமும் ரூ.200 விலையில் ஒரு சிறப்பு என்டர்டெயின்மென்ட் பேக்கை வைத்துள்ளது. ஜியோவின் இந்த ரூ.200 திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இதில் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹோட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி+, சன் நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) உள்ளிட்ட 15 பிரபலமான ஓடிடி சந்தாக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
கூடுதலாக, ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்ஸ்கள் வாயிலாகச் சோனி என்டர்டெயின்மென்ட், சன் டிவி நெட்வொர்க், வார்னர் பிராஸ், டிஸ்கவரி மற்றும் ஈடிவி போன்ற முன்னணி நெட்வொர்க்குகளின் 1000க்கும் மேற்பட்ட பிரீமியம் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்திலும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது என்பதால், இதை ஒரு பொழுதுபோக்கு ஆட்-ஆன் பேக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதுவும் படியுங்கள்: ஒரு ரூபாய் கூட தேவையில்லை! இலவசமாக படங்கள், வெப் சீரிஸ் பார்க்க சிறந்த OTT தளங்கள்!
Jio Rs 55 Data Pack
ஜியோ ரூ.55 பிளான் விவரங்கள்: ஓடிடி சந்தாக்கள் எதுவும் தேவையில்லை, குறைந்த செலவில் லைவ் டிவி மற்றும் கூடுதல் டேட்டா மட்டும் போதும் என்று நினைக்கும் பயனர்களுக்காக ஜியோ ரூ.55 திட்டத்தை வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ஆட்-ஆன் பேக்கில் மொத்தம் 10 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஜியோஸ்டார் மற்றும் ஜியோ டிவி வழியாக சோனி, சன் டிவி, டிஸ்கவரி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம். இதிலும் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் சேர்க்கப்படவில்லை.
நீங்கள் ஓடிடி பிரியராக இருந்தால், 20 ஓடிடி ஆப்கள் தரும் வோடபோன் ஐடியா ரூ.200 திட்டமும், 1000 லைவ் டிவி சேனல்களை விரும்பினால் ஜியோவின் திட்டங்களும் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.


