15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!

iQOO X Concept போன் 15000mAh பேட்டரி மற்றும் பவர்ஃபுல் Snapdragon 8 Elite Gen 10 Pro சிப்செட்டுடன் அறிமுகமாகியுள்ளது. முழு விவரங்கள்!

15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!

ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இப்போதே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது ஐக்யூ (iQOO) நிறுவனம். இதுவரை எந்த ஒரு போன்களிலும் பார்க்காத அசுர பேட்டரி மற்றும் பவர்ஃபுல் பிராசஸருடன் புதிய கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.

மொபைல் பிரியர்கள் வாயடைத்துப் போகும் வகையில் iQOO X Concept (ஐக்யூ எக்ஸ் கான்செப்ட்) என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்ல வைக்கும் இந்த மாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் வந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

iQOO X Concept Specifications

ஐக்யூ எக்ஸ் கான்செப்ட் அம்சங்கள்: இந்த போனில் 7-இன்ச் அளவிலான 2K எல்டிபிஓ 6.0 டிஸ்பிளே (2K LTPO 6.0 Display) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் விளையாடுவதற்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கும் பக்காவான காட்சி அனுபவத்தை இது வழங்கும்.

தொடுதிரை மிக மென்மையாகவும் மின்னல் வேகத்திலும் செயல்பட இதில் 240Hz ரெஃப்ரெஷ் ரேட் (240Hz Refresh Rate) மற்றும் 4,800Hz டச் சாம்ப்ளிங் ரேட் வசதி தரப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்குத் திரையின் கீழ் பாதி பகுதி முழுவதிலும் இயங்கும் வகையிலான அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) தொழில்நுட்பம் இதில் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

iQOO X Concept Camera

ஐக்யூ எக்ஸ் கான்செப்ட் கேமரா: கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் பின்புறத்தில் தரமான மூன்று கேமராக்கள் கொண்ட செட்டப் இடம்பெற்றுள்ளது. இதில் 200 மெகாபிக்சல் சோனி பிரைமரி கேமரா (200MP Sony Primary Camera) முதன்மையாக உள்ளது.

இதனுடன் தூரத்து காட்சிகளைத் தெளிவாகப் படம் பிடிக்க 200 மெகாபிக்சல் சாம்சங் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (200MP Telephoto Lens) மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் (50MP Ultra Wide Camera) கொடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுப்பதில் இந்நிறுவனம் நிஜமாகவே வெச்சி செஞ்சிட்டாங்க என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: டிஸ்பிளேவே கிடையாது! Google-ன் புதுவிதமான Fitbit Air பேண்ட்!

15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!

iQOO X Concept Processor

ஐக்யூ எக்ஸ் கான்செப்ட் பிராசஸர்: இந்த போன் அசுர வேகத்தில் இயங்குவதற்கு குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 10 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 10 Pro Processor) சிப்செட் இணைக்கப்பட்டுள்ளது.

கேமிங் பிரியர்களுக்கு லேக் இல்லாத அனுபவத்தை வழங்க ஐக்யூவின் சொந்த கியூஎக்ஸ் சிப் (QX E-sports Chip) மற்றும் 24GB ரேம் (24GB RAM) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

iQOO X Concept Battery

ஐக்யூ எக்ஸ் கான்செப்ட் பேட்டரி: இந்த போனின் மிகப்பெரிய ஹைலைட்டே இதில் பேக் செய்யப்பட்டுள்ள ராட்சத பேட்டரி (Massive Battery) பேக்கப் தான். இதில் 15000mAh திறன் கொண்ட ப்ளூ ஐஸ் சாலிட்-ஸ்டேட் பேட்டரி (15000mAh Solid-State Battery) வழங்கப்பட்டுள்ளது.

இந்த அளவு பெரிய பேட்டரி இருப்பதால், பல நாட்களுக்கு சார்ஜர் பக்கமே போகத் தேவையில்லை என்ற அளவிற்குத் தாராளமான பேக்கப் கிடைக்கும்.

iQOO X Concept Price

ஐக்யூ எக்ஸ் கான்செப்ட் விலை: இது ஒரு எதிர்கால கான்செப்ட் போன் (Concept Phone) என்பதால் இப்போதைக்கு நேரடியாக விற்பனைக்கு வராது. இருப்பினும் இதன் தோராயமான விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன் ஆரம்ப வேரியண்ட் தோராயமாக ரூ.82,000 விலையிலும், டாப் மாடல் சுமார் ரூ.1,00,000 விலையிலும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது போன்ற சுடச்சுட டெக் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெக் நியூஸ் தமிழ் (Tech News Tamil) தளத்துடன் இணைந்திருங்கள்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக