Realme C100i Launch Date ஆகஸ்ட் 27-ல் ரிலீஸ்!

6500mAh சக்திவாய்ந்த பேட்டரி, 120Hz டிஸ்பிளே மற்றும் IP64 பாதுகாப்புடன் Realme C100i ஆகஸ்ட் 27-ல் வெளியாகிறது. விலை மற்றும் முழு விவரங்கள் இதோ!

Realme C100i Launch Date and 6500mAh Battery Tamil

ரியல்மி (Realme) நிறுவனம் தனது புதிய ரியல்மி சி100ஐ (Realme C100i) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Realme C100i Launch Date in India

ரியல்மி சி100ஐ வெளியீட்டு தேதி விவரங்கள்: இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

குறிப்பாக பிளிப்கார்ட் (Flipkart) தளம் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது. அறிமுகத்தின் போது கூடுதல் வங்கி தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme C100i Specifications

ரியல்மி சி100ஐ அம்சங்கள்: 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (HD+ LCD Display) உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 720 x 1570 பிக்சல்ஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த யுனிசாக் டி7250 சிப்செட் (Unisoc T7250 Chipset) உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி யுஐ 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Realme UI 7 Based Android 16 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5 எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் (LED Flash) மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இதையும் படியுங்கள்: iPhone 17 Pro Flipkart Offer அதிரடி தள்ளுபடி!

Realme C100i Specifications and IP64 Rating Details

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (MicroSD Card Slot) ஆதரவு இதில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இதில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளது. இதுதவிர இராணுவ தர சான்றிதழான மில்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H Military Standard) பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இதையும் படியுங்கள்: Realme P4s 5G: 8000mAh பேட்டரியுடன் ஆகஸ்ட் 26-ல் ரிலீஸ்!

Realme C100i Price in India

ரியல்மி சி100ஐ இந்திய விலை விவரங்கள்: 6500எம்ஏஎச் பேட்டரி (6500mAh Massive Battery) உடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (15W Fast Charging) வசதியும் உள்ளது.

டூயல் சிம் (Dual SIM), 4ஜி வோல்ட்இ (4G VoLTE), வைஃபை 5 (Wi-Fi 5), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக