தற்போது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 1GB அல்லது 1.5GB டேட்டா உள்ள பேக்குகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன. இதனால் வீடுகளில் உள்ள பெரியவர்கள் சாதாரண பட்டன் போன் (Button phone) பயன்படுத்தினாலும், வாட்ஸ்அப் அல்லது யூடியூப் பார்க்காத நிலை இருந்தாலும் மாதா மாதம் 200 முதல் 300 ரூபாய் வரை நெட் பேக்கோடு சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியாகியுள்ள புதிய உத்தரவின் சிறப்பம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
TRAI New Rules and Voice Only Plans
டிராய் புதிய விதிகள் மற்றும் மலிவு விலை திட்டங்கள்: டிராய் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி டெலிகாம் நிறுவனங்களுக்கு மூன்று மிக முக்கியமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
டேட்டா இல்லாத மலிவு விலை பிளான்: ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் கட்டாயமாக டேட்டாவே இல்லாத, வெறும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அடங்கிய தனி ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியே தீர வேண்டும்.
ஒரே தேதியில் புதுப்பித்தல் (Same Date Renewal): வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தின் 5-ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதமும் அதே 5-ஆம் தேதிதான் வேலிடிட்டி முடியும். 28 நாட்கள், 24 நாட்கள் கொண்ட பிளான்களை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது. பிப்ரவரி மாதத்தில் 30 நாட்கள் இல்லாததால், அந்த மாதத்தின் கடைசி நாளில் திட்டம் புதுப்பிக்கப்படும்.
வழக்கமான பிளான்களுக்கு சமமான வாய்ப்பு: தற்போது டேட்டாவோடு வழங்கப்படும் 30 நாள் பிளான்களுக்கு இணையாக, இந்த டேட்டா இல்லாத வாய்ஸ் பிளான்களையும் மக்கள் சுலபமாக வாங்கி ரீசார்ஜ் செய்யும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள்: சீனாவுக்குள்ளேயே வெடித்த மோதல்! YMTC vs CXMT என்ன பண்றாங்க?
Benefits for Button Phone and Secondary SIM Users
பட்டன் போன் மற்றும் செகண்டரி சிம் பயனர்களுக்கான நன்மைகள்: டிராய் எடுத்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால், இந்தியாவில் இன்றும் பட்டன் போன்களைப் பயன்படுத்தி வரும் சுமார் 20 கோடிக்கும் அதிகமான பாமர மக்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கவுள்ளது. இவர்களது மாதாந்திர ரீசார்ஜ் செலவு இனி பாதியாகக் குறையும்.
அதேபோல், ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்களது வங்கி கணக்கு மற்றும் பிற தேவைகளுக்காக இரண்டாவது சிம் கார்டு (Secondary SIM) பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு டேட்டா தேவையே இல்லை என்றாலும், சிம் கார்டு துண்டிக்கப்படாமல் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக மாதா மாதம் கட்டாயமாகப் பணம் கட்டி வந்தனர். இனி அவர்களும் மிகக் குறைந்த செலவில் வெறும் வாய்ஸ் பிளான்களை மட்டும் போட்டு பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் ஆரம்பத்தில் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்த போதிலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிராய் அமைப்பு இந்த உத்தரவை தற்போது திட்டவட்டமாக இறுதி செய்துள்ளது.

