POCO F7 5G Offers: 7550mAh பேட்டரி போனுக்கு அதிரடி தள்ளுபடி!

போகோ எப்7 5ஜி (POCO F7 5G) ஸ்மார்ட்போன் 7550mAh பேட்டரி, 90W சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் உடன் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்து

POCO F7 5G Offers: 7550mAh பேட்டரி போனுக்கு அதிரடி தள்ளுபடி!

போகோ (POCO) நிறுவனத்தின் புதிய போகோ எப்7 5ஜி (POCO F7 5G) ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடி விலையில் (Discount price) நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பெரிய பேட்டரி (Big battery) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) விரும்பும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இந்த புதிய 5G போன் கிடைக்கிறது. இதன் அம்சங்களை முழுமையாகப் பார்த்துவிட்டு, இறுதியில் இதன் விலைச் சலுகைகளைப் பார்க்கலாம்.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) மட்டுமல்லாமல், பக்கா பர்ஃபாமென்ஸ் (Performance) கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் சிப்செட்டையும் (Snapdragon chipset) கொடுத்துள்ளது. இந்த அவுட்புட்டுக்கு ஏற்ப பேக்கப் எதிர்பார்க்கும்படி பெரிய பேட்டரியை கொடுத்துள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங்கிலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறது.

POCO F7 5G Specifications

போகோ எப்7 5ஜி அம்சங்கள்: இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) கொண்ட 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் (1.5K resolution), 3840Hz பிடபிள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (3840Hz PWM dimming) மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3200 nits peak brightness) கிடைக்கிறது. மேலும், 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant touch sampling rate) வருகிறது.

இதுபோக ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் (Mid-range budget) கிடைப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) இதில் உள்ளது.

இதையும் படியுங்கள்: Vi Rs 625 Plan கஸ்டமர்களுக்கு குட் நியூஸ்! முழுசா 60 நாள் வேலிடிட்டி!

POCO F7 5G Processor

போகோ எப்7 5ஜி சிப்செட்: இதில் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஓஎஸ் அப்கிரேட்களை (4 OS upgrades) இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security updates) கிடைக்கின்றன.

சிப்செட் மட்டுமல்லாமல், ஹார்ட்வேர் லெவல் 3டி ஐஸ்லூப் கூலிங் (3D IceLoop Cooling) வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் போன் சூடாகாமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ரேஜ் என்ஜின் 4.0 (Rage Engine 4.0) கொண்ட மாடலாகவும் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

இதையும் படியுங்கள்: Xiaomi 18 Fold: 200MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகம்!

POCO F7 5G Offers: 7550mAh பேட்டரி போனுக்கு அதிரடி தள்ளுபடி!

POCO F7 5G Camera

போகோ எப்7 5ஜி கேமரா: சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சாருடன் (Sony IMX882 sensor) 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை (8MP ultra-wide camera) இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் (4K video recording) ஆதரவு உள்ளது.

முன்பக்க கேமராவைப் பொறுத்தவரை ஓம்னிவிஷன் ஓவி20பி சென்சாருடன் (OV20B sensor) 20 எம்பி செல்ஃபி கேமரா (20MP selfie camera) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகத் தெளிவான செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்களை எந்த ஒரு வெளிச்ச சூழலிலும் எளிதாக எடுக்க முடியும்.

POCO F7 5G Battery

போகோ எப்7 5ஜி பேட்டரி: இந்த போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (90W fast charging) கொண்ட 7550mAh பெரிய பேட்டரி (7550mAh big battery) கிடைக்கிறது. அதிக நேரம் கேமிங் விளையாடினாலும் சார்ஜ் பற்றிய கவலையே இல்லாமல் நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி பேக்கப்பை (Battery backup) இது உறுதி செய்கிறது.

போனின் நீடித்துழைக்கும் தன்மைக்காக IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and water resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தூசு மற்றும் தண்ணீர் சார்ந்த பாதிப்புகளில் இருந்து போன் முழுமையான பாதுகாப்பைப் பெறுகிறது.

POCO F7 5G Discount Price?

போகோ எப்7 5ஜி விலை: இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி (12GB RAM + 256GB storage) கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,800 தள்ளுபடி (Credit card discount) கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.34,199 விலைக்கு இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நுகர்வோர் வசதிக்காக மூன்று மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ (No-cost EMI) சலுகை கிடைக்கிறது. பெரிய பேட்டரியுடன் தள்ளுபடி விலையில் போன் வாங்க இது நல்ல சாய்ஸ்!

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக