விஐ ரூ.179 திட்ட விவரங்கள் (Vi Rs 179 Plan Details)
இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்திற்கு 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி (Validity) வழங்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமின்றி, கூடுதல் பலனாக ஓடிடி (OTT) சந்தாவும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இதில் போஸ்ட் டேட்டா சலுகை எதுவும் கிடைக்காது. ஏனென்றால், இந்த திட்டம் பயனர்களுக்கு தினசரி டேட்டாவை வழங்குவதில்லை.
எனவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு வரம்பற்ற லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) முழுமையாகக் கிடைக்கும். மொத்த வேலிடிட்டிக்கும் சேர்த்து 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும். அத்துடன் வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்துவதற்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுதவிர விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) இலவச சந்தாவும் பயனர்களுக்குக் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: POCO X8 Pro Max 5G: ரூ.49,000 போன் வெறும் ரூ.42,999-க்கு! ஆஃபர் விபரம்!
விஐ ரூ.189 திட்ட விவரங்கள் (Vi Rs 189 Plan Details)
முன்னதாகப் பார்த்த திட்டத்தைவிட சற்றே கூடுதல் வேலிடிட்டி தேவைப்படும் வாடிக்கையாளர்கள், இந்த ரூ.189 திட்டத்தைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். இதில் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் இலவசமாகக் கிடைத்த விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா இந்தத் திட்டத்தில் கொடுக்கப்படாது. மற்ற சலுகைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கும்.
அதாவது, அதேபோன்ற வரம்பற்ற அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் இலவச ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) முழுமையாகக் கொடுக்கப்படும். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுபோக மொத்த பயன்பாட்டிற்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டாவும் தினசரி அடிப்படையில் கிடைக்காது. எனவே, இந்த 1 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த பிறகு போஸ்ட் டேட்டாவைப் பயன்படுத்த முடியாது.
விஐ ரூ.199 திட்ட விவரங்கள் (Vi Rs 199 Plan Details)
இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய இரண்டு திட்டங்களில் கிடைத்ததைவிட கூடுதலாக வேலிடிட்டியும் கிடைக்கும்; அதேபோல டேட்டாவும் கூடுதலாகவே கிடைக்கும். அத்துடன் விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தாவையும் இந்த திட்டத்தில் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் கஸ்டமர்களுக்கு முழுமையாக 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
இந்த நாட்களில் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) தடையின்றி கிடைக்கும். மேலும் மொத்தம் 2 ஜிபி டேட்டாவை இந்த வேலிடிட்டி காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், இதிலும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்காது. இதனுடன் மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் வழங்குகிறது. ரூ.200 விலைக்குள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் பட்ஜெட் திட்டம் வேண்டும் என்பவர்கள், இந்த மூன்று ரீசார்ஜ் ஆப்ஷன்களில் தங்களுக்கு ஏற்றதைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம்.

