Google Pixel 10a:7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் (OS updates) மட்டுமல்லாமல், பிரீமியம் தரம் மற்றும் கேமரா அம்சங்களைக் (Camera features) கொண்ட ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலைக்கு வாங்க திட்டமிட்டால், இப்போது பிளிப்கார்ட்டில் (Flipkart online shopping) கிடைக்கும் கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) நம்ப முடியாத சலுகையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனை ஆப்ஷனில் எடுக்கலாம். இந்த சலுகைகள் குறித்த முழு விவரங்கள் இதோ.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (8GB RAM + 256GB storage) கொண்ட வேரியண்ட்டின் விலை ₹55,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ₹2,800 தள்ளுபடியுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்த தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு (Selected credit cards) மட்டுமே கிடைக்கும். ஆகவே, ₹53,199 விலைக்கு இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ (6 months no-cost EMI) சலுகை கொடுக்கப்படுகிறது. இப்படி வாங்கும்போது, ₹3,000 தள்ளுபடியை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, ₹52,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ள முடியும். அப்சிடியன் (Obsidian), ஃபோக் (Fog), லாவெண்டர் (Lavender) மற்றும் பெர்ரி (Berry) ஆகிய கலர்களில் இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications)
டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) கொண்ட கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. இருப்பினும், 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை (7 years Android OS updates) வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் (7 years security updates) இந்த கூகுள் பிக்சல் 10ஏ பெறுகிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3000 nits peak brightness) கொடுக்கப்பட்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேமராவில் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) தொழில்நுட்பம் கொண்ட 48 மெகாபிக்சல் மெயின் கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவை (48MP main + 13MP ultra-wide camera) இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் (4K video recording) மற்றும் பிடிஏஎப் (PDAF focus) கொடுக்கப்பட்டு இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் பிரண்ட் கேமராவை (13MP front camera) இந்த போன் கொடுக்கிறது.
பேட்டரி மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் (Battery & Extra Features)
30W பாஸ்ட் சார்ஜிங் (30W fast charging) கொண்ட 5100mAh பேட்டரி (5100mAh battery) கிடைக்கிறது. மேலும், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் (10W wireless reverse charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
இது ஸ்லிம் மாடலாக இருக்காது; ஆகவே, 9 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & water resistant) கிடைக்கிறது. அத்துடன் டைப்-சி ஆடியோ (Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) இதில் உள்ளன.