புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?

Nokia இதுவரை இந்தியாவில் அதிக 4ஜி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது மேலும் 5ஜி போன்களை அறிமுகப்படுத்த நோக்கியா முடிவு செய்துள்ளது. புத...

Nokia இதுவரை இந்தியாவில் அதிக 4ஜி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது மேலும் 5ஜி போன்களை அறிமுகப்படுத்த நோக்கியா முடிவு செய்துள்ளது. புதிய நோக்கியா 5ஜி போன் செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

nokiamob இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நோக்கியா ஜி42 5ஜி போன் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும். எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் செப்டம்பர் 6ஆம் தேதி அமேசான் தளத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக பிரீமியம் விலையில் வெளியிடப்படுவதால் இந்த போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?

புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?

Nokia G42 5G போன் ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த போனின் விவரக்குறிப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் 720 x 1,612 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 560 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன.

நோக்கியா ஜி42 5ஜி போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தை வழங்குகிறது. மேலும், இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. ஆனால் இந்த போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்பில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?

20 வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான அம்சங்களை இந்த அற்புதமான நோக்கியா போன் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்அப் கிடைக்கும் என நோக்கியா தெரிவித்துள்ளது.

நோக்கியா G42 5G ஆனது 5G, USB Type-C, 3.5mm ஆடியோ ஜாக், Wi-Fi, GPS போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா G42 5G போனில் OZO ஆடியோ வசதி உள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். நோக்கியா G42 5G போன், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 12 5G மற்றும் OnePlus Nord போன்களுடன் போட்டியிடும்.

இதேபோல், நோக்கியா இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பிரீமியம் விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,365,tecno,4,telecom,17,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,362,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?
புதிய Nokia 5G போன்..எந்த மாடல்?
https://i0.wp.com/www.techvoicetamil.com/wp-content/uploads/2023/09/nokia-g42-5g2-1693810710.webp?resize=600%2C337&ssl=1
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2023/09/nokia-5g_52.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2023/09/nokia-5g_52.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content