அம்மாடியோ அம்மா.. OnePlus Ace 6 Pro Max புது Pro Max மாடல்.,OnePlus Ace 6 Pro Max Could be first Phone Launch With Snapdragon 8 Gen 5 Chipset Report
எந்த மாடல்?
ஆன்லைனில் கசிந்த சில்லறை விற்பனைப் பெட்டியில், OnePlus விரைவில் OnePlus Ace 6 Pro Max என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus Ace 6 Pro Max - Full phone specifications
கடந்த மாதம் சீனாவில் Snapdragon 8 Elite சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 6 உடன் ஒப்பிடும்போது இது சிறந்த செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் இது "Pro Max" என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் OnePlus 15R எது? நேற்று வரை OnePlus 15 உடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 6 மாடல், மறுபெயரிடப்பட்டது மற்றும் OnePlus 15R என்ற பெயரில் அதே OnePlus 15 உடன் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது OnePlus Ace 6 Pro Max மாடலின் வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மாடல்களில் எது OnePlus 15R என உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. OnePlus 15R ஆக எது வந்தாலும் அது நமக்கு வெற்றிதான். ஏனென்றால் இரண்டும் கேமிங் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட மாடல்கள்.
என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
OnePlus Ace 6 Pro Max ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 5 சிப்செட் பொருத்தப்படலாம். இது உண்மையாக இருந்தால் - OnePlus Ace 6 Pro Max உலகின் முதல் Snapdragon 8 Gen 5 ஸ்மார்ட்போனாக இருக்கும்
சமீபத்தில், 8000mAh பேட்டரி கொண்ட OnePlus Turbo என்ற ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஆன்லைனில் கசிந்தன, மேலும் OnePlus Turbo மாடல் OnePlus Ace 6 Pro Max மாடலாக இருக்கலாம்.
ஒன்பிளஸ் டர்போ -ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட், கூடிய 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 8 5 ஜென் சிப்செட், (Snapdragon 8 Gen 5 SoC)
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா
- எக்ஸ் -ஆக்சிஸ லீனியர் வைப்ரேஷன் மோட்டார். (X-axis linear vibration motor)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- NFC ஆதரவு
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 8000mAh பேட்டரி
OnePlus 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? அதன் விலை என்ன? OnePlus 15 நவம்பர் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. OnePlus 15 ஸ்மார்ட்போனின் அடிப்படை 12GB RAM + 256GB உள் சேமிப்பு விருப்பம் சீனாவில் இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 50,000க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இது ரூ. 65,000 முதல் ரூ. 75,000 வரை அறிமுகப்படுத்தப்படலாம்.
COMMENTS