நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto G67 Power 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன அம்சங்கள்?

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto G67 Power 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன அம்சங்கள்?

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto G67 Power 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன அம்சங்கள்?

Moto G67 Power: Motorola நிறுவனம் நாளை (நவம்பர் 5) இந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் அறிமுகத்திற்கு முன்னதாக ஆன்லைனில் கசிந்துள்ளன.

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,000 க்கு கீழ் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Moto G67 Power Specifications

மோட்டோ ஜி67 பவர் அம்சங்கள்: இந்த புதிய Moto G67 Power  போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இந்த போனின் டிஸ்ப்ளே 1,080×2,400 பிக்சல்கள், எச்டிஆர் 10, (HDR 10) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், (120Hz Refresh Rate) (Corning Gorilla Glass 7i protection) கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto G67 Power 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன அம்சங்கள்?

இந்த மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2 chipset)  சிப்செட்டுடன் வெளியிடப்படும். குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

குறிப்பாக, மோட்டோ ஜி67 பவர்  ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இயக்க முறைமையுடன் வெளியிடப்படும். இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழைப் பெற்றுள்ளது.

மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT-600 சென்சார் + பின்புறத்தில் 8MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP கேமராவும் உள்ளது. இந்த போன் 4K வீடியோவையும் பதிவு செய்யலாம். இது தவிர, இந்த போனில் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Moto G67 Power 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. என்ன அம்சங்கள்?

இதேபோல், Moto G67 Power ஸ்மார்ட்போன் ( dust and splash resistance)  IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் ஆதரிக்கிறது. இந்த போனில்  (In-display Fingerprint Sensor) இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

மோட்டோ ஜி67 பவர் "Moto G67 Power " ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி காப்புப்பிரதியை வழங்கும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. இந்த போனில் டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உட்பட பல சிறந்த அம்சங்கள் உள்ளன.

இந்த சாதனம் 5G, 4G VoLTE, Wi-Fi, GPS மற்றும் USB Type-C உள்ளிட்ட பல இணைப்பு விருப்பங்களையும் ஆதரிக்கிறது. Moto G67 Power போன் நாளை மதியம் 12 மணிக்கு Flipkart-ல் அறிமுகப்படுத்தப்படும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக