Android 17 Leaks Reveal New Blur UI, App Lock and Screen Recorder Features: கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 16-ஐத் தொடர்ந்து, அடுத்த தலைமுறை Android 17 இயங்குதளத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.
மொத்தமா மாறுது! Android 17-ல் வரும் புதிய 'Blur' டிசைன்!
கண்ணாடி போன்ற டிசைன் (Blur UI & Glassy Look)
ஆண்ட்ராய்டு 17-ன் மிகப்பெரிய ஹைலைட் அதன் "Blur Effect" தான்.
- இதுவரை வால்யூம் பட்டனை (Volume Slider) அழுத்தினால், அதன் பின்னணி நிறம் முழுமையாக (Solid Color) இருக்கும்.
- ஆனால் Android 17-ல், இது கண்ணாடி போல (Translucent) இருக்கும். அதாவது, பின்னால் இருக்கும் வால்பேப்பர் அல்லது ஆப்ஸை நீங்கள் மங்கலாகப் பார்க்க முடியும்.
- இது ஐபோனில் உள்ள "Liquid Glass" டிசைனைப் போலவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் ப்ரீமியமாக இருக்கும். "மொத்தமா மாறுது! Android 17-ல் வரும் புதிய 'Blur' டிசைன்!"
புதிய ஸ்க்ரீன் ரெக்கார்டர் (New Screen Recorder Pill)
தற்போது ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யும்போது மேலே ஒரு பெரிய நோட்டிஃபிகேஷன் இருக்கும்.
- ஆனால் இனி, ஒரு சிறிய "Pill Shaped" (மாத்திரை வடிவ) ஐகான் மட்டுமே திரையில் மிதக்கும்.
- இதில் ஆடியோ, மைக்ரோஃபோன் மற்றும் டச் பாயிண்ட்ஸ் ஆகியவற்றை ஆன்/ஆஃப் செய்வது மிக எளிதாக இருக்கும்.
நேட்டிவ் ஆப் லாக் (Built-in App Lock)
இது பல ஆண்ட்ராய்டு பயனர்களின் நீண்ட நாள் கனவு!
- இனி வாட்ஸ்அப் அல்லது கேலரியைப் பூட்ட (Lock) தனியாக ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
- ஆண்ட்ராய்டிலேயே "App Lock" வசதி வரவுள்ளது. ஒரு ஆப்பை லாங் பிரஸ் (Long Press) செய்தாலே "Lock App" என்ற ஆப்ஷன் வரும் என்று தெரிகிறது.
வைஃபை & டேட்டா தனித்தனியாக! (Quick Settings Split)
Android 12-ல் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவை ஒரே பட்டனுக்குள் (Internet) கொண்டு வந்தது பலருக்கும் பிடிக்கவில்லை.
- Android 17-ல் இது மீண்டும் தனித்தனி பட்டன்களாக (Wi-Fi Separate, Mobile Data Separate) மாற வாய்ப்புள்ளது.
ஆண்ட்ராய்ட் 17 அப்டேட் சூப்பர்.. ஆனா ஆப்பிள் பக்கம் என்ன நடக்குது தெரியுமா? புது AirTag வந்தாச்சு! 👉 தொலைஞ்ச பொருள் உடனே கிடைக்கும்! Apple AirTag 2 அறிமுகம்!
★ Tech Voice Verdict
ஆண்ட்ராய்டு 17 பார்ப்பதற்கு அழகாக மாறப்போகிறது என்பது உறுதி. குறிப்பாக அந்த Blur Effect பயன்படுத்துவதற்கு மிகவும் ஸ்மூத் ஆன அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆனால், பழைய போன்களில் இது பேட்டரியை அதிகம் குடிக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது பற்றிய முழு விபரங்கள் அடுத்தடுத்த அப்டேட்களில் தெரியும்.
Source / நன்றி: 9to5Google, image credit Source / நன்றி: androidauthority

