கம்மி பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. BT காலிங்.. 300mAh பேட்டரி - விலை எவ்வளவு தெரியுமா?, honour choice watch, ஹானர் சாய்ஸ் வாட்ச் அம்சங்கள்,ஹானர் சாய்ஸ்
honor choice watch Specifications
ஹானர் சாய்ஸ் வாட்ச் விவரக்குறிப்புகள்: இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. குறிப்பாக இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல் பெரிய டிஸ்பிளேயுடன் வெளிவந்துள்ளதால், பயன்படுத்த மிகவும் அருமையாக உள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் டிஸ்ப்ளே 410 x 502 பிக்சல்கள், 500 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஹானர் சாய்ஸ் எக்ஸ் மாடலுக்கு 100+ வாட்ச் முகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வடிவமைப்பில் ஹானர் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
Honor Choice வாட்ச் மாடலில் SpO2 மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்ட்ரெஸ் மானிட்டர், ஸ்லீப் டிராக்கிங், பெண் சைக்கிள் டிராக்கர் ஆகியவை உள்ளன. குறிப்பாக இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கருடன் (மைக்ரோஃபோன்/ஸ்பீக்கர்) இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு புளூடூத் அழைப்பு ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 5ATM (நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (5ATM)) தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல் 120 ஒர்க்அவுட் முறைகளுடன் வெளிவந்துள்ளது. மேலும், இந்த புதிய SmartWat மாடலில் ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, QZSS நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளன. இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலின் எடை 28.3 கிராம்.
காம்பஸ், கால்குலேட்டர், மியூசிக் கன்ட்ரோல், ரிமோட் ஷட்டர், ஃபைண்ட் போன், டார்ச், வெதர், டிஎன்டி, ஹானர் சாய்ஸ் வாட்ச், ஸ்டாப்வாட்ச், அலாரம் உள்ளிட்ட அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த Honor Choice X மாடலில் 300mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் 12 நாட்கள் வரை பேட்டரி பேக்கப்பை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ஹானர் சாய்ஸ் வாட்ச் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலின் விலை ரூ.6,499. ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடலை ரூ.5,999 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் பிப்ரவரி 24ஆம் தேதி ஹானர் இணையதளத்திலும், அமேசானிலும் விற்பனைக்கு வரும்.
COMMENTS