HONOR Magic6 Pro அசத்தல் அம்சங்களுடன் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம்.

HONOR Magic6 Pro அசத்தல் அம்சங்களுடன் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம்.,Honor Magic 6 series camera specs ,Honor Magic 6 Pro Price, Launch Date

HONOR Magic6 Pro அசத்தல் அம்சங்களுடன் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம்.

கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய விரிவான தகவல்களை இப்போது இங்கே பார்க்கலாம்.

HONOR Magic6 Pro specifications

 ஹானர் மேஜிக் 6 ப்ரோ விவரக்குறிப்புகள்: இந்த ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் உடன் வருகிறது. போனில் Adreno 750 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

மேஜிக் UI 8.0 அடிப்படையிலான Android 14 உடன் இந்த போன் வருகிறது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். Honor Magic 6 Pro ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் கிடைக்கிறது: 12GB RAM + 256GB நினைவகம் மற்றும் 16GB RAM + 256GB நினைவகம் மற்றும் 16GB + 1TB நினைவகம்.

HONOR Magic6 Pro அசத்தல் அம்சங்களுடன் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம்.

Honor Magic 6 Pro ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் குவாட் வளைந்த OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதன்பின் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 19:69:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 4320ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங், எச்டிஆர் பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை இந்த போனின் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இதேபோல், ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடலில் 50எம்பி வைட் மெயின் கேமரா ஓம்னிவிஷன் ஓவிஎச்9000 + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 180எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (180எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா) மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த கேமராக்கள் எல்இடி ஃபிளாஷையும் ஆதரிக்கின்றன. இந்த போனின் உதவியுடன் 4K வீடியோக்களை பதிவு செய்யலாம்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமரா + 3டி டெப்த் கேமராவுடன் இந்த போன் வருகிறது. இந்த போனின் செல்ஃபி கேமரா 4K வீடியோவையும் பதிவு செய்ய முடியும். இந்த அற்புதமான ஃபோனில் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது. இந்த போனின் வடிவமைப்பில் ஹானர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

HONOR Magic6 Pro அசத்தல் அம்சங்களுடன் பிப்ரவரி 25-ம் தேதி அறிமுகம்.

ஹானர் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 5600எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 66W வயர்லெஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது.

Honor Magic 6 Pro ஸ்மார்ட்போன் 5G, Dual 4G VoltE, Wi-Fi 7 802.11PE, Bluetooth 5.3, GPS, AGPS, USB Type-C port, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வருகிறது. தொலைபேசியில் டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எஃபெக்ட்களுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

Honor Magic 6 Pro அறிமுகம் எப்போது? 

Honor Magic 6 Pro ஆனது பிப்ரவரி 25 ஆம் தேதி மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) இல் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த போன் முதலில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். ஹானர் மேஜிக் 6 ப்ரோ இந்தியாவில் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதாரம் 

கருத்துரையிடுக