புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. வருது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. வருது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?,Motorola Edge 50 Neo Specifications,

புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. வருது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

Motorola கடந்த ஆண்டு மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவை அறிமுகப்படுத்தியது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனுக்குப் பிறகு, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Motorola Edge 50 Neo Specifications

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள்: ஆன்லைனில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும். மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் ஃபோன் ஆதரிக்கிறது.

புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. வருது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

மேலும், இந்த புதிய போனில் டூயல் ரியர் கேமரா, டைமென்சிட்டி சிப்செட், ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாகவும், இந்த போன் கிரே, ப்ளூ, பாய்ன்சியானா மற்றும் ஒயிட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சில Motorola Edge50 Neo விவரக்குறிப்புகள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளன. விரைவில் அதன் அனைத்து அம்சங்களும் வெளியிடப்படும். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்களையும் பாருங்கள்.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ விவரக்குறிப்புகள்: ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் முழு HD+ poOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்ப்ளே 2400×1080 பிக்சல்கள், 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக, மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் சிப்செட் உள்ளது. இது (Mali-G610 MC3 GPU) GPU கிராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வகைகளில் கிடைக்கிறது. மேலும், இந்த போன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் உடன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் 50 எம்பி பிரதான கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்க்கான 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. மேலும், இந்த போனில் டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. வருது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இதன் இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் Wi-Fi 6E, Bluetooth 5.2, GPS, NFC போன்றவை உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் சிலிகான்/வேகன் லெதர் பேக் பேனல் உள்ளது மற்றும் பிளாக் பியூட்டி, கேனீல் பே மற்றும் சோதிங் சீ வண்ணங்களில் கிடைக்கிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக