Poco நிறுவனம் Poco M6 Plus 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, இந்த புதிய Poco ஸ்மார்ட்போனில் 108MP கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. Poco M6 Plus 5G இன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது ஆன்லைனில் பாருங்கள்.
Poco M6 Plus 5G specifications
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி விவரக்குறிப்புகள்: புது Poco M6 Plus 5G போன் 6.79 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் வெளியிடப்படும். மேலும், இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 650 நிட்ஸ் பிரகாசம், 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Poco M6 Plus 5G ஸ்மார்ட்போன் (6GB RAM + 128GB) 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகத்துடன் வெளியிடப்படும். இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
மேலும், இந்த புதிய போகோ போன் இந்தியாவில் Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். இந்த போன் ஹைப்பர்ஓஎஸ் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14ஐயும் இயக்குகிறது. இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உள்ளன.
Poco M6 Plus 5G ஸ்மார்ட்போனில் 108MP முதன்மை கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இந்த போகோ போன் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13எம்பி கேமராவுடன் அறிமுகமாகும். இது தவிர, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த Poco M6 Plus 5G ஸ்மார்ட்போனில் IP53 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது. மேலும், இந்த புதிய Poco M6 Plus 5G போனில் 3.5mm ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அற்புதமான அம்சங்கள் உள்ளன.
Poco M6 Plus 5G போன் 5030mAh பேட்டரியுடன் வரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப்பை வழங்கும் மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் (33W பாஸ்ட் சார்ஜிங்) வசதியும் உள்ளது.
Poco M6 Plus 5G ஃபோன் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வரும். குறிப்பாக, இந்த புதிய Poco போன் ரூ.13,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. Poco M6 Plus 5G போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது மேலும் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
photo courtesy: Poco


